பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் (ஈண்டிய-திரண்ட, சங்கம்-சங்கு; பற்று-புகலிடம்: யாமுடைய பற்று-நம்முடைய புகலிடம்.) என்று குறிப்பிடுவர். இந்த ஆசிரியரே இன்னொரு வெண்பாவினால் விஷ்ணு சித்தர் கிழியறுத்த கதையை வைணவர்களின் நினைவில் நிலைபெறச் செய்துள்ளார்.

மின்னார் தடமதில்சூழ்

வில்லிபுத்துனர் என்றாருகால் சொன்னார் கழற்கமலம் குடினோம்.--முன்னாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.' |மின் ஆர்-ஒளி நிறைந்த தடமதில் அகன்றமதில் ஒரு கால்-ஒரு தரம்; தழல் கமலம்-அடித்தாமரை: சூடினோம் தலை மேல் கொண்டோம்-) பாண்டியபட்டர் சொல்லுகிறபடியே இக்கதை பல நூற் றாண்டுகளாக வைணவப் பெருமக்களுக்குக் கீழான நெறியை அகற்றி மேலான நெறியினைக் காட்டி வந்திருக் கின்றது. பல்லாண்டு பாடிய பட்டர்பிரானும் பெரியாழ்வார்’ என்னும் ஒரு புதிய திரு நாமம் பெற்று வைணவ ஞானச் சுடர்களான பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். மற்றைய ஆழ்வார்களும் பரம பக்தியினால் எம் பெருமானுக்கு மங்களாசாஸ்னம் செய்துள்ளார்கள் என்பது உண்மையே. பகவானுக்குக் குறையொன்றும் இல்லாமல் இருப்பதே நமக்கும் மங்களம்! என்று செய்துள்ளார்கள் அவர்கள். ஆனால் இப்பெரியாழ்வாரோ சர்வரட்சகனையும் இரட்சிக்க வழி தேடித் தடுமாறுவது 8. திருப்பல்-தனியன்.