பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூடலழகர் 63 போல் திருப்பல்லாண்டு’பாடியுள்ளார்; எம்பெருமானுடைய வாழ்வையே தமது வாழ்வாக நினைத்துப் போற்றியுள்ளார். இந்த முறையில் இவர் ஏனைய ஆழ்வார்களினும் பெரியராதலின், பெரியாழ்வார் என்ற திருநாமம் பெற்றார் என்பது மணவாளமாமுனிகளின் திருக்குறிப்பு. மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர் வத்தளவு தான் அன்றிப் பொங்கும் பரிவாலே வில்லிப்புத்துர்ப் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் Յւյգ: fr. *** (ஆர்வத்து அளவு-நிறைந்த அன்பின் அளவு: பரிவுஇரக்கத்துடன் கூடிய பேரன்பு") என்பது பாசுரம். ஆழ்வார்களுக்கு உரிய ஆர்வத்தையும் மிஞ்சிப் பொங்கிய பரிவால் பல்லாண்டு பாடிய காரணமாக விஷ்ணு சித்தருக்குப் பெரியாழ்வார் என்ற பட்டம் கிடைத்தது என்பது மாமுனிகளின் கருத்து. பல்லாண்டு பாடிய பெரியார் தரம் வளர்த்த அன்பு மகளை எம்பெருமானுக்கு அளித்து இறைவனுக்கும் மாமனார்’ என்று மதிக்கப் பெற்ற குறிப்பும், தாயுள்ளம் கொண்டு தம் அழகுத் தெய்வமாகிய கண்ணனைத் தமது பாவனையாலேயே தமது திருமொழியில் வளர்த்து விட்ட குறிப்பும் பெரியாழ்வார்' என்ற பேரிலும் புகழிலும் புதைபொருளாக அமைந்து விட்டதைக் கண்டு மகிழலாம். பாண்டிய மன்னன் அளித்த பட்டர்பிரான்' என்ற பட்டத்தை விட இத் திருநாமம் புகழ் பெற்று سیس-سسس-سسس سیستم 9. உப. ரத், மாலை- 18