பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூடலழகர் 65 என்ற அடிகளால் அறிகின்றோம். வையை நெடுமால்' என்பதற்குச் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் "பூரீ இருந்தவளமுடையார்’ என்று விளக்குவர். இருந்த வளமுடையார்-இருந்த திருக்கோலத்தில் வளப்ப முடையார். இத்திருக்கோயிலின் தரைதளத்தில் எழுந்தருளிய எம்பெருமான் இருந்த திருக்கோலத்தில் இருப்பதால் அவரையே இச்சொற்றொடர் குறிப்பதாகக்கூறு வர்பேராசிரியர் மு. இராகவய்யங்கார் சுவாமிகள். இப் பெயர் --- ல் அழகருக்கு வழங்கவில்லையேனும், அப்பெருமானது இருந்த திருக்கோலம் ஆங்கு வந்து சேவிப் போருக்குப் பேரானந்தம் தரத்தக்க வண்ணம் இன்றும் இருப்பதால் இப் பெயர் வழங்கியதாதல் வேண்டும் என்றும் வற்புறுத்துவர் அந்த அறிஞர் ' திருமாலைத் துதிக்கும் அடியார்கள் அப்பெருமானது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களைச் சிறப்பிக்கும் மரபினை நாம் நன்கு அறிவோம். எனவே, இருந்த திருக்கோலத்துடன் திருமால் எழுந்தருளிய இத் திருப்பதியை இருந்தவளம் எனவும் அப்பெருமானை இருந்தவளமுடையார்’ எனவும் கொள்ளல் பொருத்தமேயன்றோ? திருவாலவாவுடையார் என்று சிவபிரானைக் கூறும் வழக்குகளையும் ஈண்டுச் சிந்தித்தல் தகும். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் வையை நெடுமால்' என்ற தொடருக்கு அந்தரவானத்து எம்பெருமான் என்று உரை எழுதுவர். இந்த விளக்கமும் கூடல் அழகர் பற்றியதே என்று கொள்ளல்தகும். இத் திருக் கோயிலின் மேல் தளத்தில் (First Floor) கிடந்த திருக்கோலத்துடன் எம்பெருமான் சேவை சாதிப்ப தால் அவ் விளக்கம் பொருந்துகின்றதன்றோ? பரிபாடலிலும் நம் சிந்தனை ஒட்டமெடுக்கின்றது. பரிபாடல் திரட்டிலுள்ள, 12. இராகவய்யங்கார், மு : ஆராய்ச்சித்தொகுதி(8-க் வது கட்டுரைகாண்க.) பா. தி-5