பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருமோகூர்க் காளமேகம்

  • s:مبا)

எம்பெருமானை அடைவதற்கு சாத்தியோபாயம் சித்தோபாயம் என்ற இரண்டு வித உபாயங்கள் வழிகள்) வைணவ சாத்திரங்களில் பேசப்பெறுகின்றன. சாத்தியோ பாயம் என்பது, நம்மால் செய்யப்பெறும் உபாயம். பக்தி பிரபத்திகளை இதற்கு எடுத்துக்காட்டு களாகக் கொள்ளலாம். சித்தோபாயம் என்பது நம்மால் செய்யப்பெற வேண்டியதாயன்றி முன்பே உள்ள உபாயம். இது சர்வேசுவரனைக் குறிப்பது. சீமன் நாராயணன் நல்லார் பொல்லார் என்ற வேறு பாடின்றி எல்லோர்க்கும் உறவினன்: நம் அஞ்ஞானத்தை ஒழிக்கக்கூடிய கருணைக்கடல். தனது நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் இரட்சித்து நிகரற்று நிற்பவன். பெரிய பிராட்டியார் நமக்குப் புருஷகாரமாய் நின்று பரிந்து பேச நம்மிடம் மேலும் கருணை வளரப் பெற்றவன். இத்தகைய எம்பெருமான் வேறு உபாயங்களை அநுட்டிக்க ஆற்றல் இல்லாது பிரபத்தியை அருட்டிப்பவர்கட்கு மற்ற உபாயத்தின் இடத்தில் நின்று பலன் அருளும் சித்தோபாய மாகின்றான். அவனைப் பற்ற நினைப்பதற்கும் அவன் அருள் வேண்டும். அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என்ற மணிவாசகப் பெருமான் கூறியதும் இது பற்றியதே யாகும். 1. புருஷகரம்-தகவுரை, பரிந்துரை. 2. திருவா. சிவபு-அடி-18