பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூடலழகர் 7 : இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் திருமோகூருக்குப் போகச் சித்தமாகின்றோம். திருமோகூர் மதுரை மாநகருக்கு வடக்கே ஏழு, எட்டுக் கல் தொலைவிலுள்ளது. மதுரை- மேலுனர் நெடுஞ்சாலை வழியே ஒற்றைக்கடைவரை சென்று, அதன் பிறகு கிழக்கே திரும்பி ஒரு மைல் சென்று இவ்வூரை அடைதல் வேண்டும். மதுரையிலிருந்து திருவாதவூர் வழியே மேலுனருக்குச் செல்லும் பேருந்திலும் செல்லலாம்; அல்லது மதுரையிலிருந்து திருவாதவூர் வரையிலும் செல்லும் நகரப் பேருந்தினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் தங்கியிருக்கும் கல்லூரி இல்லம் College House) என்ற விடுதியில் அதிகாலையில் நீராடித் தூய நல்லாடை அணிந்து மதுரைப் பேருந்து நிலையத்திற்கு வருகின்றோம். பேருந்தில் ஏறி இவ்வூரை தோக்கி வருங்கால் திரு மோகூர் என்ற பெயர் ஆராய்ச்சியில் நம் மனம் ஈடு படுகின்றது. தம்நாட்டுப் பாமர மக்களும் சாத்திர உண்மை களை அறிந்து கொள்வதற்குக் கருஆலம்போல் திகழ்பவை இதிகாசங்களும் புராணங்களுமாகும். அவையே இன்று நம் பெயராய்வுக்கும் கை கொடுத்து உதவுகின்றன. திருமால் மோகினி அவதாரம் எடுத்த வரலாறு மிகவும் சுவையானது. திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுப்பதற்குத் தேவர் களும் அசுரர்களும் ஒன்று சேர்கின்றனர். அமுதம் வந்ததும் தேவர்கள் அசுரர்கட்குப் பங்கு கொடுக்க இசைய வில்லை. அசுரர்கள் சும்மா விடுவார்களா? அவர்கள் அமுத கலசத்தைத் தூக்கிக்கொண்டு ஓடத் தொடங்குகின்றனர். தேவர்கள் திருமாலிடம் முறையிட, அவர் மோகினி வடிவத்துடன் அசுரர்கள் முன்னே காட்சி அளிக்கின்றார். இரு சாராருக்கும் அமுதத்தைத் தாமே பங்கிட்டுத் தருவ தாகக் கூறிக் கலசத்தை வாங்கிக் கொள்ளுகின்றார். அமுதத்தைப் பங்கிடவும் முனைகின்றார். தேவர்கள் பக்கம் கலசமும் அகப்பையுமாக வருங்கால் அமுதத்தைத் தாராளமாக வார்க்கின்றார். அசுரர்கள் பக்கம் வருங்கால் தமது மோகனப் புன்னகையாலும் ஆடலாலும் பாடலாலும்