பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அவர்களை மயக்குகின்றார் அமுதத்தை வார்க்காமலேயே. இறுதியாக அசுரர்கட்கு ஒரு துளிகூட இல்லாமல் அமுதம் காலியாகி விடுகின்றது. இங்ங்னம் அசுரர்களை ஏமாந்த சோணகிரிகளாக்க எடுக்கப்பெற்றதே மோகனாவதாரம். இந்த அவதாரம் எழுந்த தலமே மோகனுர்; அதுவே மோகூர்’ எனக் குறுகி திரு' என்ற அடையுடன் சேர்ந்து 'திருமோகூர்' என்றாயிற்று என்பதாக அறிகின்றோம். இந்த நிலையில் நாம் ஏறியிருக்கும் பேருந்தும் திரு மோகூரை வந்தடைகின்றது. இந்தத் திவ்விய தேசத்தைத் திருமங்கை யாழ்வாரும் நாம்மாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர்’ என்பது சிறிய திருமடல். நம்மாழ்வார் ஒரு திருவாய் மொழியால் (பதிகத்தால்) மங்களசாசனம் செய்துள்ளார். மருத நிலப் பகுதியைச் சார்ந்த இவ்வூர் நீர்வளம் நிலவளம் மிக்கதாகத் திகழ்கின்றது. எடுத்த எடுப்பில் முதல் பாசுரமே,

தாள தாமரைத் தடம்அணி

வயல்திரு மோகூர்” !தாள-தாள் உரத்தையுடைய தடம்-குளங்கள்.) என்று தொடங்குகின்றது. வானமாமலை என்ற திவ்விய தேசத்தில் ஒருபொழில், தேனமாம் பொழில்' என்று ஆழ்வாரால் திருநாமம் பெற்றது போலவே இத்திருப்பதியின் தடாகமும், 'தாள தாமரைத் தடம்: என்றே ஆழ்வாரால் திருநாமம் பெற்றுத் திகழ்கின்றது. ஆழ்வார் திருவாக்கில் வந்த சொல்லையிட்டே வழங்கு தல் பல்லாற்றானும் சிறப்புடைத்தன்றோ? 3. சிறிய திருமடல் கண்ணி - 4 5. ഒു. 10.1:1 4. திருவாய் 10. (தாளதாமரை) 6. திருவாய் 5.7:6