பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் *3> இவ்விடத்தில் பெரியாழ்வாரின் திருவரங்கப் பாசுரப்பகுதி ஒன்றையும் நினைக்கத் தோன்றுகின்றது. 'உரம்பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடிபோல் உயர்ந்து காட்ட வரம்புஉற்ற கதிர்செங்கெல் தாள் சாய்த்துத் தலைவணங்கும் தண்அரங்கமே.”* விஷ்ணுவையே எப்போதும் தம் சித்தத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பெரியாழ்வாருக்கு விண்ணளவும் ஓங்கியிருக்கும் தாமரையைக் காணும் போதெல்லாம் எம்பெருமானின் உலகளந்த சேவடியைச் சேவித்தாற் போல இருக்கும். செந்நெற் பயிர்கள் கதிர் கனத் தாலே தலைவணங்கியிருக்கும் வயலைக் காணும்போது வணக்கமே வடிவெடுத்தாற் போன்ற பாகவதோத்தமர் களைச் சேவித்தாற்போல இருக்கும். அங்ங்னமே, எம்பெருமானையன்றி வேறொன்றையும் தம் மனத்தில் கொள்ளாத நம் ஆழ்வாருக்கும் தாம் காணும் காட்சி கள் எல்லாம் எம்பெருமானை நினைவுபடுத்துகின்றன. 'பூவையும் காயாவும் நீல மும் பூக்கின்ற காவிமலர் என்றும் காண்தோறும் - பாவியேன் மெல்ஆவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வகை எல்லாம் பிரான் உருவே ஏன்று.' என்ற இவர் வாக்கில் போலி கண்டு மேல் விழும்படி யான அளவுக்கு அளவிறந்த அன்பு எம்பெருமான் திரு மேனியில் தமக்கு விளைந்த படியைக் கூறியதை நாம் அறிவோம் அன்றோ? இன்னோர் இடத்திலும் வயல் வளத்தைப் பேசு கின்றார் ஆழ்வார். திருக்கோயிலின் எட்டுத் திக்கு களிலும் செந்நெல் வயல்களும் கருப்பங்காடுகளும் சூழ்ந் திருக்கும் என்று ஆழ்வார் கூறிய வண்ணமே இன்றும் காணப்பெறுவதைக் கண்டு மகிழ்கின்றோம். يع ?. பெரியாழ்-திரு 4.9:8. 8. பெரி திருவந். 73.