பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ናß பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நோக்கிற்குத் தோற்றவர்களை அணைப்பவை அவனது திருக்கைகள். அத்திருக்கைகள் தீண்டுங்கால் அவற்றா லேற்படும் ஊற்றுணர்ச்சிக்குத் தோற்று விழும் இடம் அவனது திருவடிகள். இவை யாவும் இத்தடாகத்திற்குரிய தாமரைகளாகும். தடாகத்தில் தாமரை மலர்களேயன்றி மொட்டுகளும் இருக்கு மன்றோ? சோதிச் செவ்வாய் முகிழ்தா என்பதனால் புகழையுடையதாய்ச் சிவந்திருக் கின்ற திருப்பவளத்தையே முகுளமாகக் கொள்ளத்தக்கது. பச்சை மாமலை போலிருக்கும் அவனுடைய திருமேனி தாமரை இலைக்கு ஒப்பாகும் என்பது சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா என்பதனால் பெறப்பஇ கின்றது. இக்கருத்துகளைச் சிந்தித்தவண்ணம் உள்ளிருக் கும் தடாகத்தைக் காண விரைகின்றோம். கொடிய வெப்பத்தில் அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேகம் பொழியும் மழையையோ எதிர்பார்ப்பது இயல்பேயன்றோ? அங்ங்னமே, நம்மாழ் வாரும் தம்முடைய இருள் தருமா இவ்வுலக வாழ்வெல் லாம் தொலையப்பெறும் சமயத்தில் காளமேகப் பெரு மாளை அநுபவிக்கிறபடியைத் தெரிவிப்பதை எண்ணு கின்றோம். 'காள வேகத்தையன்றி மற்றொன்றிலம் கதியே.' என்ற அவன் திருவாக்கை எண்ணிய வண்ணம் திருக் கோயிலுக்குள் நுழைகின்றோம். அச் சிறிய ஊரில் இது பெரிய கோயில். கிழக்கு நோக்கிய திருவாயிலை உடையது. வாயிலைத் தாண்டி யதும் நாம் வந்தடைவது கம்பத்தடி மண்டபம். இந்த மண்டபத்தில் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்த சிவகங்கைச் சீமைப் பாளையக்காரர்களான சின்னமருது, பெரிய மருது இவர்களின் சிலைகள் இருப்பதைக் காண் 17. திருவாய் 10.1:1