பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் 79 என்று திருவுள்ளம் கொண்ட படியையும் எண்ணி மகிழ் கின்றோம். ஆழ்வார் சுடர்கொள்சோதி' என்று திருநாமம் வழங்கியருளிய மூர்த்தி நம்மைப் பிச்சேற்றுகின்றது. இங்கு ஆழ்வார் கூறிய கருத்தினைச் சிந்திக்கின்றோம். இங்கு ஆ ழ் வார் குறிப்பிடுவது எம்பெருமானின் இயற்கை அழகையன்று. தேவர்களும் முனிவர்களும் தம்மை வந்தடைந்ததை தினைந்து எம்பெருமான் இவர்கள் ஆபத்துக் காலத்திலாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே? ஒரு பயன் கருதியாகிலும் நம்மை தாடி வத்தார்களே! என்று உவப்படைகின்றானாம். அந்த உவப்பின் மிகுதியால் எம்பெருமானின் திரு மேனி புதிய புகர் பெற்துத் திகழ்கின்றதாம். இதுவே ஆழ்வாரின் திருவுள்ள மாயிருக்கும் என்று எண்ணு கின்றோம். இன்னொரு விதமாகவும் நம் மனம் சிந்திக்கத் தொடங்குகின்றது. கண்டாரை ஈர்த்துப் பிச் சேற்றும் பேரழகையுடைய எம்பெருமானை ஒரு பயனையும் கருதாது பற்ற வேண்டியிருக்க, இடர்கெட எம்மைப் போந்தளியாய்' என்று பலகாலும் சொல்லிச் சொல்லி பற்றப் பார்க்கின்றனரே என்று பரிதாபம் தோன்ற 荔 § ஆழ்வார் கூறுகிறதாகவும் கருதலாம். இங்ஙனம் கருதுங்கால் நம் மனத்தில் ஓர் ஐயமும் எழுகின்றது. 'ஆழ்வாரும் இடர்கெட வேண்டுமென்று தானே கோருகின்றார்? இடர் கெட அடிபரவுதும் தொண்டிர் வம்மினே' என்றும், நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே' என்றும் சொன்னவரன்றோ இவர்?’ என்பதே இந்த ஐயம். நம் சிந்தையிலேயே நமது ஐயத்தை அகற்றும் கருத்தும் ஒளி விட்டெழுகின்றது. "ஆழ்வார் இடர் வேறு: தேவர் முதலியோரின் இடர் வேறு அவர்கள். அரக்கர்கள் 26. திருவாய் 19.1:4 27. ഒു- 1.0.1:4 28- ഒു 10, 1 :3