பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

143


“எவ்வளவு புண்ணிய பலன் இது? நான் மட்டும் விழித்துக் கொண்டு தேடிப் பின்தொடர்ந்து வந்திருக்கவில்லை யானால் நாளைக் காலை இந்த நாடு முழுவதுமே கதிகலங்கிப் போய் அலறிப் பதைபதைக்கும் படியான காட்சியையல்லவா கான நேர்ந்திருக்கும்?”

“உனக்குப் புண்ணியமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் இது பாவக் கணக்குத்தான். தண்ணீர் தேங்கத் தேங்க அழுகி நாறுவதைப்போல் இந்த உலகத்தில் வாழும் நாட்கள் பெருகப் பெருகப் பாவச் சுமையை அதிகமாகக் கட்டிக்கொள்கிறோம்.”

“தேவி ! தாங்கள் அறியாத ஞானநூல்களையும் கருத்துக்களையும் நானா உங்களுக்குச் சொல்லப்போகிறேன்? இந்த உலகில் பிறருக்குப் பயன்படுமாறு வாழ்வதனால் பாவமோ துன்பமோ பெருகுமானால் அத்தகைய துன்பத்தை விலை கொடுத்தாவது வாங்கிக் கொள்ளவேண்டும் என்று நம்முடைய திருவள்ளுவப்பெருமான் கூறியருளிய கருத்து தங்களுக்குத் தெரியாததல்லவே?”

"ஒப்புரவினால் வரும்கேடு எனின் அஃதொருவன்
விற்றுக் கோள் தக்கதுடைத்து”

என்ற குறளின் கருத்தால் மகாராணியைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டுபோக முயன்றாள் பகவதி! சிறிது நேரத்துத் தர்க்க விவாதங்களுக்குப்பின், “வா. குழந்தாய், உன்னுடைய சாமர்த்தியமான பேச்சினால் என்னையே சரியானபடி மடக்கிவிட்டாய் நீ போகலாம் வா” என்று பகவதியின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு அந்தப் புரத்துக்குத் திரும்பினார் மகாராணி வானவன்மாதேவி.

அரண்மனை நிகழ்ச்சியை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒரு நாள் மாலைப்பொழுதுக்குப் பின் வந்த இரவில் வேறோர் பகுதியிலே நடந்த எதிர்பாராத சில நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் கவனிபோம்.

யாத்திரீகர்களை அழைத்துக் கொண்டு கன்னியா குமரியிலிருந்து திரும்பிய அண்டராதித்த வைணவன்