பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

பாண்டிமாதேவி / முதல் பாகம்


படித்துறை இருக்கிறது. நீ சிரமப்பட வேண்டாம். நான் இங்கேயே நீராடிக் கொள்கிறேன்.”

“ஐயோ! கூடாது. அப்பா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பறளியாற்றில் புதுத் தண்ணிர் பாய்கிறது. உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. நீங்கள் பேசாமல் என்னோடு எழுந்து வாருங்கள். நான் சொல்லுகிறபடி கேளுங்கள். நீங்கள் இருக்கிறவரை உங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு என்று சிறிது நேரத்துக்கு முன்புதான் அப்பா கூறிவிட்டுப் போனார்” என்றாள் குழல்மொழி.

“அப்படியானால் மகாமண்டலேசுவரர் இப்போது இங்கு இல்லையா?” என்றார் துறவி.

“இல்லை! மகாராணியாரைச் சந்திப்பதற்காகப் போயிருக்கிறார்.”

“என்ன காரியமாகப் போயிருக்கிறாரோ? என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாரே!”

“எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது! அவர் திரும்பி வருகிறவரை தங்களுக்கு இங்கு ஒரு குறைவும் இல்லாமல் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று எனக்கு உத்தரவு.”

துறவி ஒன்றும் மறுமொழி கூறாமல் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.

கருகருவென்று அடர்ந்து வளர்ந்திருந்த இளந் தாடிக்கு மேல் சிவந்த உதடுகள் நெகிழ அவர் சிரித்த சிரிப்பு, குழல்மொழியைக் கிறங்க வைத்தது. துறவி நீராடப் புறப்படுவதற்காக எழுந்தார். இரண்டு கைகளையும் உயர்த்தி மேலே தூக்கிச் சோம்பல் முறித்தபோது, மூங்கிலின் மேல்புறம் போல மின்னிய அந்த வளமான புஜங்களின் அழகு மகாமண்டலேசுவரருடைய புதல்வியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

“வாருங்கள் நேரமாகிறது. அடிகளை அரண்மனை நீராழி மண்டபத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் பூசைக்காக நான்