பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

105


“ஐயா! உலகத்தில் தங்களை இன்னாரெனச் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் இவர்கள்தான், திருடினவர்கள் - திருட வந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொலை செய்யப் போகிறவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், அல்லது மானம் இழந்தவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தாம் தங்களை இன்னாரென்று சொல்லிக் கொள்ளுவதற்கு நாணம் அடைய வேண்டும்” என்று சொல்லி விட்டுக் குறும்புத்தனமான சிரிப்பொன்றை நெளியவிட்டாள் அவள்.

“என்ன சொன்னாய்? எவ்வளவு திமிர் உனக்கு!” என்று சொல்லிக்கொண்டே மூன்று பேர்களும் சத்திரத்து வாசற் படியின் மேலே ஏறினார்.

“ஆமாம்! சொன்னேன், சோற்றுக்கு உப்பில்லை என்று, சி! போங்கள் வெளியே” என்று சொல்லிக்கொண்டே கணவனை உட்புறம் இழுத்துக்கொண்டு முகத்தில் அறைந்தாற்போல் வாசல் கதவைப் படிரென்று அடைத்துத் தாழிட்டாள் கோதை.

கதவு முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் அதிர்ச்சியடைந்து பின்னுக்கு. நகர்ந்த மூவரும் வாசற்படிகளில் தடுமாறி நிலைகுலைந்து வீழ்ந்தனர்.

“அயோக்கியப் பெண்பிள்ளை! என்ன பேச்சுப் பேசி விட்டாள்” என்று கறுவிக் கொண்டான் ஒருவன்.

“வரட்டும்! வரட்டும்! எங்கே போய்விடப்போகிறாள்? நாமும் சில நாட்கள் இந்தப் பிரதேசத்தில் தானே இருக்கப்போகிறோம்? இந்த அம்மையைக் கவனித்துக் கொள்ளலாம்” என்று சூளுரை கூறினான் இன்னொருவன்.

“அந்த ராணியைத் தீர்த்துவிட்டுப் போகிறபோக்கில் இந்தச் சத்திரத்து ராணியையும் தீர்த்துவிடவேண்டியது தான்!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு உறுமினான் மூன்றாமாவன்.

அப்போது மேலேயிருந்து மூன்று பேர்களின் தலையிலும் அருவி கொட்டுவதுபோல் மாட்டு சாணம் கரைத்த தண்ணிர் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். மேல் மாடத்தில்