பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

119


“பெண்ணே, விலாசினி ! உங்கள் புகழ்ச்சியும், மகாராணிப் பட்டமும், இந்தக் கோட்டை கொத்தளம் முதலிய அரசபோக ஆடம்பரங்களும் எனக்குச் செங்குட்டுவன் கூறிய இந்தக் கருத்தை ஞாபகப்படுத்தின.”

மகாராணி இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தபோது நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்த பவழக்கனி வாயரும், அதங்கோட்டாசிரியரும் அங்கே திரும்பி வந்து சேர்ந்தனர்.

“என்ன ! செங்குட்டுவனைப்பற்றி ஏதோ பேச்சு நடக்கிறாற்போலிருக்கிறதே? மகாராணியாரின் சுவாரஸ்மான இலக்கியச் சம்பாஷணை யில் நாங்களும் கலந்து கொள்ளலாமல்லவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் அதங்கோட்டாசிரியர்.

“நான் எதையும் உங்களைப்போல வகை தொகையாக விவரித்துச் சொல்ல முடியுமா ? அதெல்லாம் சரி ! ந்ந்தவனத்திலிருந்துதானே வருகிறீர்கள்? அது என்ன குழப்பம் அங்கே விவரம் தெரிந்துகொண்டு வந்திருப்பீர்களே! சொல்லுங்கள். நாங்களும் தெரிந்துகொள்கிறோம்” என்று மகாராணியார் அதங்கோட்டாசிரியரை நோக்கிக் கேட்டார். உடனே அதங்கோட்டாசிரியர் பக்கத்தில் திரும்பி, “பவழக்கனிவாயரே! மகாராணியாருக்குச் சொல்லும். நீர்தான் இம்மாதிரி விஷயத்தை நன்றாக வருணித்துச் சொல்லமுடியும்’ என்று தம் சமீபத்திலிருந்த பவழக்கனிவாயரைத் தூண்டினார்.

“கலகத்தைப் பற்றிச் சொல்ல நான்தான் சரியான ஆள் என்று தீர்மானித்துவிட்டீராக்கும். பரவாயில்லை! நானே சொல்லுகிறேன்” என்று சிரிப்போடு பீடிகைபோட்டுப் பேச்சைத் தொடங்கினார் பவழக்கனிவாயர்.

“மகாராணி கோட்டைக்கு வெளியிலிருக்கும் ஏரியிலிருந்து அரண்மனை நந்தவனத்துக்குத் தண்ணிர் கொண்டுவரும் கால்வாய் வழியாக யாரோ நந்தவனத்துக்குள் புகுந்திருக்கிறார்கள். அப்படிப் புகுந்தவர்கள் யார், என்ன