பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

127


கொடும்பாளுர் மன்னன் தங்கள் தலையை வாங்கி விடுவான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்ன செய்வது என்று திகைத்தனர் அந்த மூன்று ஒற்றர்களும்.

“முத்தரையா! ஊருக்குத் திரும்பினபின் நாம் உயிரோடு இருப்பதும் இல்லாததும் சொல்லி விட்ட காரியத்தை முடித்துக் கொண்டு போகிறோமா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. ஆகவே இன்னும் காலம் கடந்து விடவில்லை. இன்று மீதமிருக்கும் இந்த இராப்போது முடிந்து, நாளைப் பொழுது விடிவதற்குள் நூறு கொலைகளைச் செய்யலாம். நூறு ஒலைகளை எழுதலாம்’-என்றான் செம்பியன் என்னும் ஒற்றன்.

“எனக்கு அப்போதே தெரியும். புன்னை மரத்துத் தோட்டத்தில் நாம் ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டுக் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அந்தக் குட்டைத் தடியன் வந்து பார்த்தானே; அப்போதே ஏதோ கோளாறு நடக்கப் போகிறதென்று என்னுடைய மனத்தில் குறளி சொல்லி விட்டது” என்றான் முத்தரையன்.

“நடந்ததைப் பேசி என்ன ஆகப்போகிறது? அந்தக் குடுமிக்காரத் தடியனை மறுபடியும் எங்காவது கான நேர்ந்தால் உடனே வெட்டிப்போடுவோம். இப்போது நடக்க வேண்டியதைக் காண்போம். செம்பியா! உன்னுடைய யோசனையைச் சொல். ஏதோ கூறினாயே?” என்றான் இரும்பொறை.

“நான் சொல்கிற வழியைக் கேட்டால் தான் கொடும்பாளுர் மன்னரின் கோபத்துக்கு ஆளாகிச் சாகாமல் தப்ப முடியும். முதலில் ஒரு போலி ஒலை தயார் செய்யவேண்டும். தளபதி நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட ஒலையில் என்ன எழுதியிருந்ததோ, அதை அப்படியே இந்தப் புது ஒலையில் எழுதி விடுவோம். ஒலையில் வடதிசை மூவரசரின் அடையாளச் சின்னங்களையும் எழுத்தாணியால் வரைந்து கொள்ளலாம். அந்த ஒலையைப் பத்திரமாக வைத்துக் கொண்டு புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப்