பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பாண்டிமாதேவி / முதல் பாகம்


போவோம். எப்படி நம்மால் கோட்டைக்குள் நுழைய முடியும்? எந்த விதத்தில் மகாராணியை நெருங்கிக் கொலை செய்ய முடியும் என்பதையெல்லாம் இப்போது நான் விவரித்துச் சொல்ல முடியாது. இந்த நள்ளிரவில் வேற்று நாட்டு ஒற்றர்களான நாம் கோட்டைக்குள்துழைவதும், குறிக்கோளை முடித்துக்கொள்வதும் நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்திருக்கின்றன. இது நம்முடைய கடைசி விநாடி முயற்சிகள்”-என்று செம்பியன் ஆணித்தரமாகக் கூறியபோது, மற்ற இரண்டு பேர்களும் மறுக்க முடியவில்லை.

“முதலில் இப்போது ஒலைக்கும் எழுத்தானிக்கும் எங்கே போவது?”

“ஆ! போவதற்கு ஒர் இடம் இருக்கிறது. எனக்கு இப்போது தான் நினைவு வருகிறது. முன் சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் இப்போது ஒலையும் எழுத்தானியும் தயாரித்து விடலாம். அந்தச் சத்திரத்து மணியகாரன் கணக்கெழுதுவதற்காக ஒலை எழுத்தாணி நிச்சயம் வைத்திருப்பான். அதோடு அந்தத் தடியனும், அவன் மனைவியான அந்தத் துடுக்குக்காரியும் அன்று நம்மை அவமானப்படுத்தினதற்குச் சரியானபடி பழி வாங்கி விடலாம்” என்று இரும்பொறை யோசனை கூறியபோது, “பாராட்டுகிறேன் இரும்பொறை! உன்னுடைய மண்டைக்குள்ளே இவ்வளவு ஞாபகசக்தி ஒளிந்து கொண்டிருக்கிறதென்பது எங்களுக்கு இதுவரையில் தெரியாமல் போய் விட்டதே!” என்று அவன் முதுகில் தட்டிக்கொடுத்தனர் செம்பியனும் முத்தரையனும்.

இந்தத் தீர்மானத்துக்குப்பின் அவர்கள் மூவரும் வேகமாக முன் சிறை அறக் கோட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்படிச் செல்லும்போது எங்காவது, யாரிடமாவது அகப்பட்டுக் கொண்டுவிட நேரிடுமோ என்ற பயத்தினால் ஊர்களுக்கும், நகரங்களுக்கும் ஊடே செல்லும் நாட்டுப் புறத்துச் சாலைகளிலோ, வழிகளிலோ செல்லாமல் காட்டுப்பாங்கான கிளை வழிகளில் மறைந்து சென்றனர்.

இந்த மூவரும் இப்படி முன் சிறை அறக்கோட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் தளபதி