பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

133


திணறிப் பிதுங்கும் விழிகளால் பார்த்தாள். பார்வை கூசியது அது மின்னலல்ல, ஒரு கத்தி! மறு விநாடி அந்தப் பெண் மூர்ச்சையாகித் துவண்டு விழுந்தாள்.


15. தளபதிக்குப் புரியாதது!

நாராயணன் சேந்தனும், மகாமண்டலேசுவரரும், விளக்கோடு, தான் நின்றுகொண்டிருந்த பக்கமாகத் திரும்பியபோது, ஐயோ! இப்போது இங்கே இவர்கள் பார்ப்பதைக் காட்டிலும் இந்தச் சுரங்கத்துக் கற்பாறைகள் மேலிருந்து மொத்தமாக இடிந்து விழுந்து என்னை இப்படியே அமுக்கிவிட்டாலும் பரவாயில்லையே! அகப்பட்டுக் கொண்டால் மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்? நான்தான் அவர் முகத்தில் எப்படி விழிப்பேன்? எதற்காக எந்தவிதத்தில் இந்தச் சுரங்கப் பாதைக்குள் இறங்க நேர்ந்ததென்று சமாதானம் சொல்லிச் சமாளிப்பேன் ? நான் என்ன சொன்னால்தான் என்ன? அவர் நம்பவா போகிறார்? என்று இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் தளபதி வல்லாளதேவனின் மனத்தில் தோன்றின தெரியுமா?

இவ்வளவு தூரத்துக்கு அவர்கள் நெருங்கி வந்துவிட்ட பின் தான் தப்ப முடியுமென்ற நம்பிக்கையே செத்துவிட்டது அவன் மனத்தில். அந்த நிலையிலும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுகின்ற தற்காப்பு உணர்ச்சியையும், பயத்தின் தூண்டுதலும் தருகின்ற சுயபலம் அவனைக் கைவிட்டு விடவில்லை.

தன்னையறியாமலேயே மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்து கொண்டிருந்தான் அவன். பத்துப் பன்னிரண்டு பாக துரம் பின்னுக்கு நகர்ந்தபின் ஒரு பாறை இடுக்கில் வல்லாளதேவன் ஒட்டிப் பதுங்கிக்கொண்டான்.

சுரங்கப் பாதைத் திருப்பத்துக்கு வந்ததுமே நாராயணன் சேந்தனும் மகாமண்டலேசுவரரும் நின்றுவிட்டனர். “இந்த