பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பாண்டிமாதேவி / முதல் பாகம்


இடத்தில்தான் யாரோ நிற்பதுபோலத் தெரிந்தது. இப்போது பார்த்தால் ஒருவரையும் காணோம். ஒருவேளை என் கண்களுக்கு மட்டுமே தெரிந்த வெறும் பிரமையோ?” என்றார் இடையாற்று மங்கலம் நம்பி.

“சுவாமி! அப்படி நம்மைத் தவிர வேற்றவர் எவரும் இந்த மாளிகையில் நுழைந்திருக்க வழியில்லை!” என்று நாராயணன் சேந்தன் அவருக்குப் பதில் கூறினான்.

“எனக்கொரு சந்தேகம் சேந்தா தளபதி வல்லாள தேவனை விருந்தினர் மாளிகைக்குக் கொண்டுபோய்த் தங்கச் செய்தாயே? அவன் நீ அங்கிருக்கும்போதே படுத்து உறங்கத் தொடங்கிவிட்டானோ? அல்லது விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தானோ?” என்று இருந்தாற்போலிருந்து எதையோ நினைத்துக் கொண்டு கேட்பவர் போலக் கேட்டார் இடையாற்று மங்கலம் நம்பி.

“சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் பற்றி நீங்கள் சிறிதும் சந்தேகப்படவேண்டாம். அவர் இந்நேரத்தில் விருந்து மாளிகையில் சுகமாகக் குறட்டை விட்டுத் துரங்கிக் கொண்டிருப்பார்!” என்று நாராயணன் சேந்தன் பதில் கூறியபோது மறைவாகப் பதுங்கியபடி அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த தளபதிக்குச் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது.

“சரி அப்படியானால் இங்கே தளபதி வந்து நிற்பது போல் என் கண்களுக்குத் தென்பட்ட தோற்றம் வெறும் பிரமையாகத்தான் இருக்கும். வீண் மனச் சந்தேகத்தால் ஏற்பட்ட நிழல் உருவம்தான். அப்படியே இங்கே ஆள் வந்திருந்தாலும் அதற்குள் நம் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கே ஒடியிருக்க முடியும்?” என்று கூறிவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு. திரும்பி நடந்தார் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி.

அவர்கள் அந்தச் சுரங்கப் பாதையின் திருப்பத்திலிருந்து திரும்பி முன்பு நின்றுகொண்டிருந்த இடத்துக்குப் போன போதுதான் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டிருந்த