பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

151


இந்த மாளிகையில் தான் படுத்துறங்குவது வழக்கம். இப்போது நான் படுக்க வந்திருக்கிறேன். நீங்கள் தூங்குகிறீர்களா, துங்கவில்லையா என்பதைப் பார்ப்பதற்காக வரவில்லை” என்று குத்தலாகவே மறுமொழி கூறினான்.

“எங்கே அப்பா ! இந்த இடையாற்றுமங்கலம் மாளிகையில் சுலபமாக அப்படி எதையும் நம்பிவிடவாமுடிகிறது: இங்கே தூங்கிவிட்டதாக நினைக்கப் படுகிறவர்கள் எல்லோரும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இரவில் தூங்காமலோ, அல்லது துரங்க முடியாமலோ, செய்ய வேண்டிய எத்தனையோ முக்கியமான காரியங்களெல்லாம் மகாமண்டலேசுவரரின் நிர்வாகத்தில் இருக்கலாம்? வேண்டுமென்றேதான் மறுபடியும் நாராயணன் சேந்தனின் வாயைக் கிளறினான் தளபதி. ஆனால் அவன் எதிர்பார்த்ததுபோல் நாராயணன் சேந்தன் விசேடமான பதில் எதையும் சொல்லவில்லை.

“தளபதி! நீங்கள் எதை வேண்டுமானால் சொல்லிக் கொண்டிருங்கள். எனக்குத் தூக்கம் வருகிறது. நான் படுத்துத் தூங்கப் போகிறேன்” என்று சொல்லி மழுப்பிவிட்டுத் தீபத்தின் ஒளியைக் குறைத்து ஒரு மூலையில் வைத்த பின் எதிர்ப்புறமி ருந்த மற்றோர் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டு விட்டான் அவன். உடனே தூங்கியும் விட்டான். சில விநாடிகளுக்குள் விருந்து மாளிகையின் பலமான சுவர்கள் பிளந்து விழுந்துவிடும் போல் கர்புர் என்று பிரமாதமான குறட்டை ஒலி நாராயணன் சேந்தனின் கட்டிலிலிருந்து கிளம்பியது.

வல்லாளதேவன் அந்த ஓசையைச் சகித்துக் கொள்வதற்காக இரண்டு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டான். அப்படியும் அந்த ஒலி, செவிக்குள் புகுந்து துளைத்தது. அப்படியே எழுந்திருந்து போய்க் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் அந்தக் குட்டைத் தடியனின் உச்சிக் குடுமியை ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் மொத்துமொத்தென்று மொத்தி விடலாமா என்று தோன்றியது அவனுக்கு. வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காகத் தனக்குக் காவலைப்போலத் தன்னருகே படுத்துகொள்ளச் சொல்லி மகாமண்டலேசுவரர் அவனை அங்கே