பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

பாண்டிமாதேவி / முதல் பாகம்


இல்லை” என்று கழற்கால் மாறனாரின் கருத்தைத் திருத்தினார் நன்கனிநாதர்.

“இந்த மந்திராலோசனைக் கூட்டத்தை இவ்வளவு நடந்த பின்பும் இன்றே நிகழ்த்துவானேன்? நாளைக்குத் தள்ளிவைத்துவிடலாமே!” என்றார் அதுவரை ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த வானவன்மாதேவியார்.

“ஆம்! அப்படிச் செய்வதுதான் நல்லது” என்ற குரல் எல்லோருடைய வாயிலிருந்தும் ஒலித்தது. ஆனால் மகா மண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி மட்டும் வாயைத் திறக்கவே இல்லை. அவருடைய மெளனத்தை மகாராணி கவனித்துவிட்டார்.

மகாமண்டலேசுவரருடைய கருத்து என்னவோ?’ என்று மெல்லக் கேட்டார் மகாராணி.

“கூட்டத்தை இன்றே நடத்திவிட வேண்டுமென்பதுதான் என் கருத்து. வேண்டுமானால் இந்த இடத்தில் நடத்தாமல், வேறோர் இடத்தில் நடத்தலாம். இன்றைக்கு என்று குறிப்பிட்ட கூட்டத்தை இன்றே நடத்தாமல் போவதனால் எத்தனையோ புதிய தொல்லைகள் உண்டாகலாம்” என்று அவர் மறுமொழி கூறியபோது அதில் தீர்மானமான பிடிவாதம் ஒலித்தது.


24. காவந்தபுரத்துத் தூதன்

இந்த அத்தியாயத்தின் கதை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னால் நேயர்களுக்கு ஒரு சில சரித்திர உண்மைகளைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர் அரசமரபு பற்றியும், அவர் வீரச் செயல்கள் பற்றியும் சிறிது அறிந்துகொண்டால் கதையின் மேற்பகுதிகளை நன்றாக விளங்கிக்கொள்வதற்கு முடியும்.

அளவற்றுப் பரந்த காலத்தின் பேரெல்லைக்கும் எட்டாமல் விரிந்துகொண்டே போகின்ற பழமையைத் தன் குலச் செல்வமாகக்கொண்ட பாண்டியர் மரபின் முதலரசன்