பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பாண்டிமாதேவி / முதல் பாகம்


முதலியவர்களும் மற்ற வீரர்களும் பதறியடித்துக்கொண்டு பிரகாரத்துக்குள் வேகமாக ஓடிவந்தனர்!

“என்ன? என்ன? இங்கே என்ன நடந்தது? ஏது இந்த வேல் ?” என்ற கேள்விக் குரல்கள் கிளம்பின.

“மேலே இருந்து யாரோ துவாரத்தின் வழியாக வேல் எறிந்துவிட்டு ஒடுகிறான். மதில் வழியாக மேலே ஏறிப் பிடியுங்கள், ஒடுங்கள்!” என்று வீரர்களை நோக்கிக் கூச்சலிட்டாள் பகவதி.


3. தளபதி கைப்பற்றிய ஒலை

தோ இன்னும் ஒரிரு விநாடியில் இறப்பது உறுதி என்று எண்ணி, எல்லாம் ஒய்ந்து தளர்ந்து சாவுக்குத் தயாராகும்படியான சூழ்ச்சிகளெல்லாம் தளபதி வல்லாளதேவனின் வாழ்வில் கணக்கின்றி ஏற்பட்டிருக் கின்றன. தன் எதிரிகள், தன்னைக் கொல்வதற்காகத் துடித்துக்கொண்டிருப்பவர்கள்-இவர்களுக்கிடையில் கூட வேடிக்கைக்காக வலுவில் போய் மாட்டிக்கொண்டு முடிவில் சிரித்தபடியே தப்பி வருவது அவன் வழக்கம். எதற்கும், எப்போதும் அஞ்சியறியாத நெஞ்சுரம் கொண்ட வல்லாளதேவன் அன்று அந்த இரவில் கடலோரத்துப் பாறைகளின் நடுவில் இரண்டு பக்கமிருந்தும் பாய்ந்து தன் தோள்பட்டையில் உரசும் வாள் நுனிகளைப் பார்த்ததும் ஒரு கணம் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்.

அவன் பாதங்கள் முன்னும் நகரவில்லை; பின்னும் நகரவில்லை. உயிருள்ள ஆளாக இயங்கி நடந்து வந்தவன் திடீரென்று சிலையாக மாறிவிட்டது போல் ஆடாது அசையாது நின்றான். கொஞ்சம் நகர்ந்தாலோ, அசைந்தாலோ வாள்கள் தோளில் அழுந்திவிடும். அவன் இடையிலும்தான் வாள் இருந்தது. இடுப்பில் உறைக்குள் தொங்கும் அந்த வாளை