பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

போகிற வழியெல்லாம் பொருநைக்கு நல்ல வரவேற்புதான். மலரும் மாலையும் துரவுவோர். மங்கல வாழ்த்தெடுப்போர், வாசனைத்துள்களை வாரியிறைப்போர், எல்லோரும் அவளைப் போற்றினார்கள். அது புனலாட்டு விழாக்காலம். பருவத்தில் பெய்த அந்த மழையால்தான் எவ்வளவு நன்மைகள். அந்த மேல்மழை பெய்திராவிட்டால் கொற்கைத்துறையில் முத்துச் சிப்பிகள் விளைவெய்தாமல் போயிருக்கும். சிப்பிகள் விளைவின்றிச் சலாபத்தில் முத்துக்குளி நடைபெறும் இடம்) முத்துக்குளி நின்று போனால் தென்பாண்டிப் பேரரசுக்கு வருவாய் குறையும். கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுநிலவேள் தென்பாண்டிப் பேரரசுக்கு அடங்கி நடப்பதாக ஒப்புக்கொண்ட நாளிலிருந்து கொற்கைத்துறையையும், முத்துச் சலாபத்தையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு அவனிடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுதோறும் பொருநையில் புதுப் புனல் பெருகி அது பாயும் பகுதியெல்லாம் பசுமையும், வளமும் பரவி நிற்கும் நல்ல பருவத்தில் கொற்கை முத்துக்குளி விழா தொடங்கும். அன்று கரவந்தபுரத்துச் சிற்றரசன் தன் பரிவாரங்களோடு கொற்கைக்கு வருவான். சுற்றுப்புறங்களிலிருந்து திரள்திரளாக மக்கள் கூடுவார்கள். உள் நாட்டிலிருந்தும் கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்தும் பெரிய பெரிய வாணிகர்கள் முத்துக்களை விலை பேசி வாங்கிச் செல்ல வருவார்கள். கொற்கையில் திருவிழாக்கூட்டம் பெரிதாகக் கூடிவிடும்.

'கடலாடி மலையேறுதல்' என்று ஒரு பழைய மரபு. கொற்கையில் முத்துக்குளி முடிந்ததும், கரவந்தபுரத்தார் பொதியமலைச் சாரல்வரை சென்று பொருநையில் நீராடி மீள்வது வழக்கம். பொருநை கடலோடு கலக்கும் இடத்துக்குச் சற்று வடக்கே கொற்கை முத்துச் சலாபம் அமைந்திருந்தது.

கொற்கைத்துறையில் கரையின் மணற்பரப்பே தெரியாமல் கூடாரங்களும் மக்கள் கூட்டமும் நிறைந்திருந்தன. இன்னிசைக் கருவிகள் முழங்கின. வாழ்த்தொலி அதிர்ந்தது. முத்துக் குளிப்புக்கெனக் குறித்த மங்கல வேளையும் வந்தது. துறையின் முன்புறத்தில் சலாபத்துக்கு அருகே கரவந்தபுரத்துச் சிற்றரரசன்