பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

297

சமாதானத்துக்குக் கொண்டுவர முயன்றான் அண்டராதித்த வைணவன்.

அதே சமயம் முத்துச் சலாபம் இருந்த பகுதியிலிருந்து பெருங் கூப்பாடு எழுந்தன. கோதையும், வைணவனும் பதற்றமடைந்து என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலுடன் கூடாரத்துக்கு வெளியே வந்து பார்த்தார்கள். சலாபத்தைச் சுற்றிலும் இருந்த கூடாரங்கள் தீப்பற்றிப் பெரிதாக எரிந்துகொண்டிருந்தன. மணற்பரப்பில் குதிரைகள் பாய்ந்துவரும் ஓசையும், வாளோடு வாள் மோதும் ஒலிகளும் ஒலங்களும், கடல் அலைகளின் ஒசையும் உடன் சேர்ந்து கொண்டதனால் ஒன்றும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. யார் யாரோ திடுதிடுவென்று இருளில் ஓடினார்கள், போனார்கள், வந்தார்கள்.

“ஏதோ பெரிய கலவரம் நடக்கிறாற் போலிருக்கிறது” என்றான் வைணவன்.

“கூடாரத்துக்குள் வாருங்கள். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொள்ளலாம்” என்றாள் கோதை

அவர்கள் கூடாரத்துக்குள் திரும்ப இருந்துபோது அந்தப் பக்கமாக யாரோ ஒர் ஆள் தீப்பந்தத்தோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. பின்னால் கூட்டமாகச் சிலர் அப்படி ஓடிவந்த ஆளைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். ஒடி வந்தவன் எப்படியாவது தப்பினால் போதுமென்ற எண்ணத்துடன் தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தான். அவன் கோதையும், வைணவனும் நின்றுகொண்டிருந்த பக்கமாக வந்தபோது அவ்விருவரும் அவனுடைய முகத்தைத் தீவட்டி வெளிச்சத்தில் ஒருகணம் நன்றாகப் பார்க்க முடிந்தது.

“ஐயோ! இந்தப் பாதகனா?” என்ற வார்த்தைகள் கோதையின் வாயிலிருந்து மெதுவாக ஒலித்தன. வைணவனுக்கும் அவன் இன்னாரென்று புரிந்துவிட்டது. உடல் ஒருவிநாடி மெதுவாக நடுங்கியது. புல்லரித்து ஒய்ந்தது. “கோதை! உள்ளே வந்துவிடு. துரத்திக்கொண்டு வருகிறவர்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு எதையாவது விசாரித்துத் தொந்தரவு செய்யப்