பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

நிலைமையை விவரித்து எழுதிய திருமுகத்துடன் அப்போதுதான் மானகவசனைத் துாதனுப்பியிருந்தான். துதுவன் புறப்பட்டுப்போன சிறிது நேரத்திற்குள் கொற்கையிலிருந்து அந்தப் புதிய செய்தி வந்தது.

“இரவில் ஆயுதபாணிகளான முரட்டு வீரர்கள் சிலர் தீப்பந்தங்களோடு கூட்டமாக வந்தார்கள். முத்துச் சலாபத்துக்கு அண்மையிலிருந்த கூடாரங்களுக்குத் தீ வைத்து விட்டுக் காவலுக்கு இருந்த நம் வீரர்களோடு போரிட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிக் குவியல்கள் சூறையாடப் பட்டுவிட்டன. அந்த முரட்டுக் கூட்டத்தில் யாருமே அகப்படவில்லை. சிலரைத் துரத்திப் பிடிக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது.” கொற்கையிலிருந்து செய்தி கொண்டுவந்த ஆள் இப்படிக் கூறியபோது பெரும் பெயர்ச்சாத்தன் திகைத்துப்போய்விட்டான்.

"தொடர்ந்து முத்துக்குளிப்பு நடைபெறுகிறதோ, இல்லையோ?

“இல்லை! தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. முத்து வாணிபத்துக்காக நெடுந்தொலைவிலிருந்து கடல் கடந்து வந்திருந்த வணிகர்களெல்லாம் பயந்துபோய்த் திரும்பிச் சென்றுவிட்டனர்.”

“என்ன ஆனாலும் முத்துக்குளிப்போ, சலாபத்து வேலைகளோ தடைப்பட்டு நிற்கக்கூடாது. நம்மைப் பல வீனப்படுத்த விரும்புகிறவர்களுக்கு முன் நாம் பலவீனமடைவதுபோல் காட்டிக்கொள்வது நல்லதல்ல. இந்தத் திருமுகம் கொண்டுவரும் துரதனோடு பொறுக்கி எடுத்த வீரர்களாக நூறுபேர் அனுப்பியிருக்கிறேன். இவர்களைக் காவலுக்கு வைத்துக்கொண்டு தொடர்ந்து முத்துக் குளிப்பை நடத்துங்கள். மற்ற ஏற்பாடுகளை இங்கே நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று முக்கியமான ஆள்வசம் ஓர் ஒலையையும் நூறு வீரர்களையும் ஒப்படைத்து உடனே கொற்கைக்கு அனுப்பினான் பெரும்பெயர்ச்சாத்தன்.

பயமும், திகைப்பும், மேலும், மேலும் திடுக்கிடும் செய்திகளும் அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்-