பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

305

“மானகவசனோ, வேறு ஆட்களோ வந்தால் என்னிடம் அனுப்புங்கள்” என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மேல்மாடத்துத் திறந்தவெளி முற்றத்துக்குச் சென்றான் அவன்.

மேல்மாடத்தில் அந்த மாலைக்காற்று சிலுசிலுவென்று வீசியது. காலத்தால் அழிக்க முடியாத பேருண்மை நான் என்று கூறுவதுபோல் வடமேற்கே பொதியமலை பரந்து கிடந்தது. ஆகாயப் பெருங்குடையை அணைய முயலும் அந்த எழில் நீலப் பேரெழுச்சியை—காலத்தை வென்றுகொண்டு நிற்கும் கல்லின் எழுச்சியைத் திறந்த வெளிடையே பார்க்கும்போது நம்பிக்கை பிறப்பதுபோல் இருந்தது பெரும்பெயர்ச் சாத்தனுக்கு ‘தன் பக்கத்தில் வடக்கு எல்லையில் போர் நெருங்கி வந்துகொண்டிருக்கிறதே' என்பதைப்பற்றி இந்த மலைக்குச் சிறிதும் வாட்டமிருப்பதாகத் தெரியவில்லையே என்று வேடிக்கையாக நினைத்தான். மேல் மாடத்துப் படிகளில் யாரோ வேகமாக ஏறிவரும் காலடியோசை கேட்டது; அவன் திரும்பிப் பார்த்தான். ஒரு சாதாரண வீரன் வந்து வணங்கி நின்றான்.

“என்ன ?”

"துரதன் மானகவசன் திரும்பி வந்திருக்கிறான்... ஆனால்...” வந்த வீரன் பதில் சொல்வதற்குத் தயங்குவதுபோல் தெரிந்தது.


4. கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்

டையாற்றுமங்கலத்தில் கொள்ளை போன செய்தியையும், கரவந்தபுரத்திலிருந்து வந்த போர்ச் செய்தியையும் மகாமண்டலேசுவரர் எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாகப் பாதுகாக்க வேண்டுமென்று கருதினாரோ, அவ்வளவுக்கு அவர் நினைக்குமுன்பே அவை பொதுவாக வெளியில் பரவிவிட்டிருந்தன. இடையாற்று மங்கலத்திலிருந்து அம்பலவன் வேளானும், கரவந்தபுரத்திலிருந்து மானகவசனும் செய்திகளை அரண்மனைக்குள் கொண்டுவந்த பின்பே அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை அவருக்கு உண்டாயிற்று. ஆனால்

பா. தே. 20