பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

“என்ன ? இராசசிம்மனா அப்படிச் செய்தான் ? இங்கிருந்து கொண்டே அவன்தான் அதைச் செய்தானென்று நீங்கள் எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள் ?” மகாராணியின் முகத்தில் வியப்பும் கலவரமும் பதிந்தன.

“இன்று நாம் எல்லோரும் கூடியிருந்த இடத்தில்தான் இடையாற்றுமங்கலத்துப் படகோட்டி இங்கு வந்து அந்தச் செய்தியைச் சொன்னான். கொள்ளைபோன செய்தியோடு வசந்த மண்டபத்திலிருந்த துறவியைக் காணவில்லை என்றும் அன்று பகலில் அவரை யாரோ தேடி வந்திருந்ததாகவும் அவன் கூறினான். நீங்கள் எல்லோரும் கொள்ளை போயிற்று என்ற அளவிலேயே அதிர்ச்சியடைந்து அதையடுத்து அவன் கூறிய குறிப்புகளை ஊன்றிக் கவனிக்கவில்லை. வசந்த மண்டபத்தில் தங்கியிருந்த துறவிதான் தங்கள் புதல்வர் குமார பாண்டியர் என்பதை முன்பே தங்களிடம் குறிப்பிட்டுள்ளேன்."

மகாராணி வானவன்மாதேவி எதுவும் சொல்லத் தோன்றாமல் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். -

“தேவி! கொள்ளை போன செய்தி வேண்டுமானால் என் முன்னெச்சரிக்கையும் மீறி எங்கும் பரவியிருக்கலாம். ஆனால் அதைச் செய்தவர் குமார பாண்டியர்தான் என்பது இப்போதைக்கு என்னையும், தங்களையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாது. ஒருவேளை என்னுடைய அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் தளபதிக்கும் சிறிது சந்தேகம் இருக்கலாம். வெளிப்படையாக இன்னார்தான் என்று அவர்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

‘மகாமண்டலேசுவரரே! குமார பாண்டின் எந்த நோக்கத்தோடு இதைச் செய்தானோ? ஆனால் 'அவன்தான் இதைச் செய்தான் என்ற இந்தச் செய்தி வெளியே பரவினால் பொதுமக்களிடையே அவனைப்பற்றி என்னென்ன இழிவான பேச்சுக்களெல்லாமோ பேசிவிடுவார்கள். செயலைக்கொண்டு மனிதனை அளக்கிறவர்களே எங்கும் நிறைந்துள்ள உலகம் இது. எண்ணங்களையும் மனப்போக்கையும் மதிப்பிட்டுப் பார்க்க