பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

“நடைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அல்லது பயப்படுகிறவர்கள் எந்த இலட்சியங்களையும் நிறுவ முடியாது” என்று பவழக்கனிவாயருக்குக் கமலவாகனர் பதில் கொடுத்தார். விவாதம் கருத்துச் செறிவுள்ளதாக இருந்தது. அந்த உரையாடல் வளர்ந்துகொண்டே போனவிதத்தில் மகாராணிக்கு ஆறுதல் ஏற்பட்டிருந்தது.

நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் குணவீர பண்டிதர் புறப்பட எழுந்தார். எல்லாருமே மரியாதையாக எழுந்து நின்றனர்.

“சுவாமி! ஒரு சிறு விண்ணப்பம்.”

“என்ன ?”

“தாங்கள் சற்றுமுன் பாடினர்களே; அந்தப் பாடலை ஓர் ஒலையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போக இயலுமோ?” இருந்தாற் போலிருந்து நினைத்துக்கொண்டு கேட்பவர் போலக் கேட்டார் மகாராணி வானவன்மாதேவி.

“ஆகா! ஒலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொல்லுங்கள். இப்போதே எழுதிக்கொடுத்துவிட்டுப் போகிறேன்” என்றார் அவர் ஒலையும் எழுத்தாணியும் வந்தன. குணவீரர் வாயால் சொல்ல, கமலவாகனர் ஒலையில் எழுதினார். எழுதி முடித்ததும் மகாராணி அதைப் பயபக்தியோடு வாங்கிக் கொண்டார். அந்தப் பாட்டுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து மகாராணியார் வாங்கிக் கொண்டதைக் கண்டு அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் ஆச்சரியத்தோடு சிறிது அசூயையும் அடைந்தனர்.


5. மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்

“தென்பாண்டி நாட்டுப் படைகள் விரைவில் வடக்கு எல்லைக்கு அனுப்பப்படும். அதுவ்ரையில் எல்லைப் பாதுகாப்பு