பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

வைத்துக்கொள்ள முயன்றாள் அவள். பின்னால் அவளுக்குப் பழக்கமான குரல் ஒலித்தது.

“பெண்ணே! இதென்ன? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா? விடிந்ததும் விடியாததுமாக உன்னை வீட்டில் காணவில்லையே என்று தேடிக்கொண்டு வந்தால், நீயோ மணல்மேட்டில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்!”

தன் நினைவு வரப்பெற்றவளாய்த் திரும்பிப் பார்த்தாள் அவள். மணல் மேட்டின் கீழே அவளுடைய தந்தை நின்று கொண்டிருந்தார்.

“அப்பா! அவருடைய கப்பல் புறப்பட்டுப் போய்விட்டது.” எதையோ இழந்துவிட்ட ஏக்கம் அவளுடைய சொற்களில் ஒலித்தது.

வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் எண்ணி, பேசி—அனுபவித்து உணர்ந்திருந்த அந்தப் பெரியவர், தம் பெண்ணின் பேதைமையை எண்ணி மனத்துக்குள் இலேசாக சிரித்துக்கொண்டே சொன்னார்—

“அதைப் பார்க்கத்தான் சொல்லாமல் கொள்ளாமல் இவ்வளவு அவசரமாக எழுந்திருந்து ஓடிவந்தாயா? அங்கே உன் அத்தை உன்னைக் காணவில்லையே என்று கிடந்து தவித்துக்கொண்டிருக்கிறாள்’ .

மதிவதனி அவருடைய பேச்சைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. “அப்பா; நான் இங்கே கரையில் வந்து நின்றதும் கப்பல் மேல் தளத்திலிருந்து என்னைப் பார்த்துவிட்ட அவர் மகிழ்ச்சியோடு அந்தச் சங்கை எடுத்து ஊதினார், அப்பா!” என்று அந்த மகழ்ச்சித் திளைப்பிலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் அவள். . . . . . .

“சரியம்மா!... போதும் அவருடைய பெருமை! வா, வீட்டுக்குப் போகலாம். இங்கே சிறிது தாமதித்தால் உன் அத்தையே நம் இருவரையும் தேடிக்கொண்டு வந்து விடுவாள்." மகளைக் கடிந்து கொள்பவர்போல் சினத்துடன் பேசி அழைத்துக் கொண்டு சென்றார் அவர். அந்தப் பெண்ணின் கால்கள்