பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

343


வெற்றிதான். அரியணை ஏறி அரசாண்டு வீரச் செயல்கள் புரிந்து தென்பாண்டி நாட்டு மக்கள் மனங்களையெல்லாம் கவரவேண்டிய நீ அந்த அரியணையையும் அரசுரிமைப் பொருள்களையுமே கவர்ந்துகொண்டு போய்விட்டாயே! யாருக்கும் தெரியாமல் இப்படிக் கவர்ந்துகொண்டு கள்வனைப்போல் போவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா, அப்பா? ஆற்றங்கரை மரம் போல் செழித்துக் கொழித்துப் பெரு வாழ்வு வாழ்ந்த உன் தந்தையைப்போல் தென்பாண்டி நாட்டை ஆளும் வீரம் கடகம் செறிந்த உன் கைகளில் இருக்குமென்றுதான் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்! நீ என்ன செய்யப் போகிறாயோ?”- அந்தக் குரல் ஒலி நின்றுபோயிற்று. - -

ஐயோ, அம்மா’ என்று அலறிவிடவேண்டும் போலிருந்தது குமார பாண்டியனுக்கு. ஆனால் அப்படி அலறமுடியாமலும் அழ முடியாமலும் ஏதோ ஒர் உணர்ச்சி அவன் வாயைக் கட்டிவிட்டது போலிருந்தது. வாயிருந்தும் நாவிருந்தும், பேசத் தெரிந்தும், அவன் ஊமையானன். - --

“நீங்கள் மிகவும் பொல்லாதவர் ! உங்களுக்கு இரக்கமே கிடையாது. கல்நெஞ்சு உடையவர்."-முகத்திலும் கண்களிலும் பொய்க் கோபம் துடிக்கக் குழல்வாய்மொழி அவன் முன்தோன்றினாள். . -

“குழல்வாய்மொழி! நீ என்னை மன்னித்துவிடு. நான் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன்’ என்று எதையோ சொல்வதற்காக அவன் வாயைத் திறந்தான்.

ஆனால் அந்தப் பெண்ணின் பேச்சு அவனை வாயைத் திறக்கவே விடவில்லை.ஆத்திரமடைந்து கூப்பாடு போட்டாள் அவள். “நீங்கள் பேசாதீர்கள்! போதும், உங்கள் பேச்சு, பேசிப் பேசி என்னை ஏமாற்றினர்கள். அத்தனையும் வெளிவேடம். உடலுக்கு வேடம் போட்டுக் கொள்ளத்தான் உங்களுக்குத் தெரியுமென்று நினைத்திருந்தேன். நீங்களோ மனத்தில், நினைவில், அன்பில், பேச்சில், எல்லாவற்றிலும் வெளிவேடம் போடுகிறீர்கள். நீங்கள் பெரிய கள்வர், மிகப் பெரிய கள்வர். உலகத்துக் கள்வர்களுக்கெல்லாம் பொன்னையும்,