பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

357

கேட்டுக் கொண்டே வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் ஒன்றும் தவறாகச் சொல்லி விடவில்லை, மகாமண்டலேசுவரர் இல்லாத சமயத்தில் இங்கு நடந்திருக்கும் கவலை தரும் நிகழ்ச்சிகளை நினைத்து உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு பேசியிருப்பேன். அதை ஒரு தவறாக எடுத்துக்கொண்டு என்மேல் கோபித்துக் கொள்ளக்கூடாது.”—

“உங்கள் மேல் கோபித்துக்கொள்வதற்கு நான் யார்? அப்படியே கோபித்துக்கொண்டாலும் என்னுடைய கோபம் உங்களை என்ன செய்து விடப் போகிறது?”—

குழல்வாய்மொழி சமாதானப்பட்டு வழிக்கு வருவதாகத் தெரியவில்லை. கோபம் வரும்போது பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வீம்பும், முரண்டும் அவளிடமும் இருந்தன. நாராயணன் சேந்தன் குழைந்தான், கெஞ்சினான். என்னென்னவோ பேசி அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். வீம்பு நீடித்ததே தவிரக் குறையவில்லை. உலகத்தில் சிரமப்பட்டுத் தான் செய்ய முடியும் என்ற வகையைச் சேர்ந்த காரியங்களில் பெண்களின் வீம்புக் கோபத்தைச் சமாதானப்படுத்துவதும் ஒன்று என அவனுக்குத் தோன்றியது.

கடைசியாக, அவளைச் சமாதானப்படுத்தி முடிந்தபோதுதான் சேந்தனுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.

“நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டால் நான் என்ன செய்வது? உங்கள் தந்தை உங்களை உடன் வைத்துக் கொண்டு செய்யவேண்டிய பெரிய பெரிய செயல்களையெல்லாம் என்னிடம் ஒப்புவித்திருக்கிறார். முக்கியமும், அவசரமும் வாய்ந்த செய்திகளை அனுப்பியிருக்கிறார். நாம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். நீங்கள் முரண்டு பிடித்தால் ஒன்றும் ஆகாது.”—

"முக்கியமும் அவசரமுமில்லாத நேரம் அப்பாவுக்கு எப்போதுதான் இருந்தது? நாட்டைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும், கவலைப்பட்டுக் கவலைப்பட்டுத் தம்முடைய உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நேரம் இல்லையே அவருக்கு. வெளியே யாரிடமும் சொல்லாமல் பொதுக் கவலைகளையும், துன்பங்களையும், மனத்தில் தேக்கி