பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

வைத்துக்கொண்டு என்ன சுகம் கிடைத்துவிட்டது அவருக்கு?” குழல்வாய்மொழியின் பேச்சு பிடிவாதத்திலிருந்து விலகிப் போய்த் தந்தையின்மேல் அனுதாபமாக வெளிவந்தது.

"உங்களுக்கே அவை யெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கின்றனவே. அம்மணி! உங்கள் தந்தைக்கு இருக்கும் பொறுப்புக்களையும், கவலைகளையும் சொல்லி நீங்களே இரக்கப்படுகிறீர்கள். தமது மாளிகையில் தம் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்கள் கொள்ளைபோய் விட்டதென்று தெரிந்தால் அவர் எப்படி அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியும்?” சேந்தனுடைய பேச்சு வளர்கிற விதத்தைக் கண்டு குழல்வாய்மொழிக்கு வேறு வகை அச்சம் ஏற்பட்டது. ‘வசந்தமண்டபத்திலிருந்த துறவி காணமற்போனது பற்றியும் தன்னிடம் அவன் துண்டித் துளைத்து ஏதாவது கேள்விகள் கேட்பானே?' என்று சிறிது கலவரமடைந்தது அவள் உள்ளம். இந்தக் கலவரமும், தந்தையிடமிருந்து அவன் கொண்டுவந்திருக்கும் முக்கியச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அவள் சினத்தைப் போக்கிவிட்டன.

பிறர் எந்தச் செய்தியைத் தன் வாயிலிருந்து கேட்பதற்கு அதிக ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறார்களோ அந்தச் செய்தியை உடனடியாகச் சொல்லி முடித்துவிடாமல் அவர்களுடைய ஆவலைத் தொடரச்செய்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் தந்திரத்தை மேற்கொண்டான் நாராயணன் சேந்தன்.

"மகாமண்டலேசுவரருடைய திருக்குமாரியிடம் அதிகப்படியான கேள்விகைைளக் கேட்டுப் புண்படுத்த வேண்டுமென்று நான் கருதவில்லை. அதே சமயத்தில் ஒன்றும் கேட்க விரும்பாமலும் இருக்க முடியவில்லை!”

"கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது: இங்கே நடந்தவற்றையெல்லாம்தான் அம்பலவன் வேளான் அங்கு தெளிவாகச் சொல்லியிருப்பானே”

குழல்வாய்மொழியிடமிருந்து கொஞ்சம் அமைதியாகப் பதில் வந்தது. முன்பிருந்த படபடப்பும் ஆத்திரமும் இல்லை. நாராயணன் சேந்தன் சிரித்துக்கொண்டான் 'ஏ, அப்பா! தங்கம்