பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

361

ஒட்டிக்கொண்டு கலந்து எதையும் அனுபவிக்க முடிகிறது. உணர்ச்சிகளை வென்று புளியம் பழமும் அதை மூடிக்கொண்டிருக்கும் ஒடும் போல் ஒட்டாமல் வாழ்ந்தால் சமய சமயங்களில் வேதனைப்படத் தான் வேண்டியிருக்கிறது. ஆச்சரியப் படத் தெரியாதவன் மற்றவர்களுக்கு ஆச்சரியப் பொருளாகவே ஆகி விடுகிறான். என்னைப் போன்ற ஒருவன் தன் அறிவால் மட்டுமே வாழ்ந்துபார்க்க முயன்றால் என்னைச் சுற்றியிருக்கும் பல்லாயிரம் பேர்களுக்கு நான் ஒர் ஆச்சரியம். ஒரு புதிர் என்று ஆகி விடுகிறேன். அப்படி ஆகும்போது சந்தர்ப்பங்கள் என்னைக் காலை வாரிவிட ஒவ்வொரு கணமும் நெருங்குகின்றன.

புதல்வி! அம்பலவன் வேளான் வந்து கூறிய செய்திகள் ஆச்சரியப் படத் தெரியாது, அதிர்ச்சியுற அறியாமல் இருந்த எனக்கும் அவற்றை உணர்த்தி விட்டன. மற்றவர்களுக்குத் தெரிந்து விடாமல் நானும் ஆச்சரியப்பட்டேன். நானும் அதிர்ச்சியடைந்தேன். உன்னால் எனக்கு ஏற்பட்ட தோல்விகள், அவை போகட்டும்! நான் அங்கிருந்து புறப்படும்போது எவ்வளவு எச்சரிக்கை செய்து விட்டுப் புறப்பட்டேன்? பெண்ணே! வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருக்கும் துறவியை ஒவ்வொரு கணமும் அருகிருந்து கவனித்துப் பேணிக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. ‘அந்நியர்களை அவரோடு சந்தித்துப் பழகவிடக் கூடாது’ என்று நான் கூறிவிட்டு வந்த அறிவுரையை நீ புறக்கணித்து விட்டாய்போலும்! துறவியாக வந்து தங்கியிருந்து யார் என்று நீயே தெரிந்து கொண்டிருப்பாய். தெரியாமலிருந்தால் நாராயணன் சேந்தன் விளக்குவான்.

“யாரோ வந்தார்கள், சந்தித்தார்கள், வசந்த மண்டபத்தில் கூடிப்பேசினார்கள். மறுநாள் விடிந்தபோது வந்தவர்களையும் காணவில்லை. துறவியையும் காணவில்லை, பாதுகாவலில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்களையும் காணவில்லை” என்று வேளான் வந்து கூறினான்.

குழல்வாய்மொழி! வடக்கே போருக்கும், பூசலுக்கும் எதிரிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மகாராணி