பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

363


குமாரபாண்டியனை விரைவில் அழைத்து வருவதாக மகாராணிக்கு வாக்களித்துவிட்டேன். நான் தேடிக்கொண்டு புறப்பட முடியாதபடி இருக்கிறது சூழ்நிலை. வேறு யாரையும் அனுப்புவதற்குமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. உடனே புறப்படுங்கள். எங்கே எப்படித் புறப்பட வேண்டுமென்று தயங்காதே. உனக்கு அது தெரியும்.! உன் உள்ளத்துக்கும் அது தெரியும். சேந்தனுக்கும் சேந்தனுடைய உள்ளத்துக்கும்கூடத் தெரியும். உரிமையோடும், உரியவனோடும் திரும்பி வாருங்கள். படித்து முடித்ததும் நீ எந்த விளக்கின் ஒளியிலிருந்து இதைப் படிக்கிறாயோ, அதன் சுடர்ப் பசிக்கு இதை இரையாக்கி விடு”

அவள் அப்படியே செய்துவிட்டாள்.


11. முள்ளால் எடுத்த முள்

மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பியைச் சாதாரண மனிதராக சாதாரண உணர்ச்சிகளுக்கு ஆளாக்கிப் பார்க்க வேண்டுமென்று விதிக்கு என்னதான் ஆசையோ? தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

கரவந்தபுரத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது தூதன் அரண்மனைக்கு வந்தபோது அவர் மேலும் வியப்புக்கு உள்ளானார். கொற்கைக் கலவரங்களும், வடக்கு எல்லைப் பூசல்களும் பற்றிய செய்திகள் அந்த இரண்டாவது தூதன் மூலம் வந்து சேர்ந்தன. ஏற்கனவே அனுப்பப்பட்ட மானகவசன் என்னும் தூதன், தான் அங்கிருந்து புறப்படுகிறவரையில் கரவந்தபுரத்துக்குத் திரும்பி வந்து சேரவில்லை என்பதையும் புதிதாக வந்தவன் கூறினான்.

அவற்றைக் கேள்விப்பட்டபோது, உணர்வுகள் பதிந்தறியாத அந்த நெற்றியில் உணர்ச்சிகளைக் காண முடிந்தது. இரண்டாம் முறையாக அந்தத் துரதன் வந்திருப்பதையும், அவன் கூறிய செய்திகளையும் மகாராணியாருக்கு அறிவிக்கவில்லை அவர். புதுப் புதுத் துன்பங்களைக் கூறி முன்பே கவலைகள்