பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

369


சீவல்லபமாறன் அதற்கு ஒப்புக்கொண்டு போனான். மகாமண்டலேசுவரர் எதை எண்ணியோ சிரித்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் வண்ணமகள் புவனமோகினி அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தாள்.

‘சுவாமி ! தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதியைக் காணவில்லை. இன்று காலை மகாராணியார் பார்த்து அழைத்துவரச் சொன்னார்கள். போய்ப் பார்த்தேன் இல்லை. அரண்மனையில் எங்குமே தளபதியின் தங்கையைக் காணாததால் எங்களுக்கு ஒரே கவலையாக இருக்கிறது. செய்தியை அறிந்து மகாராணி யாரும் மனக் கலவரமடைந்தார்கள். தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.”

“அதங்கோட்டாசிரியர் மகள் விலாசினியைக் கேட்டால் தெரியுமே? அந்தப் பெண்கள் இருவரையும் எப்போதும் சேர்த்தே காண்கிறேன் நான்!” - வியப்பை மறைத்துக் கொண்டு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.

“விலாசினி இங்கு இல்லை. இன்று காலை ஆசிரியரும்

பவழக்கனிவாயரும் ஊருக்குப் போகும்போது அந்தப் பெண்ணும் போய்விட்டாள்” என்று மீண்டும் பரபரப்பான குரலில் முறையிட்டாள் வண்ணமகள். ...

“அந்தப் பெண் காணாமல் போய்விட்டாளே என்று மகாராணியோ, நீங்களோ, யாருமே கவலைப்பட வேண்டாம். அவள் தைரியசாலி, ஏமாறுகிறவள் இல்லை, ஏமாற்றும் ஆற்றலுள்ளவள். காரியமாகத்தான் அவள் காணாமல் போயிருப்பாள்:” -

பெரிதாகக் கவலைப்படும்படி எதுவும் நடந்து விடாத மாதிரி அலட்சியமாகப் பேசினார் அவர். மகாமண்டலேசுவரர் அந்தப் பெண் காணாமற் போனது பற்றி அக்கறையில்லாமல் பேசுவது ஏனென்று வண்ண மகளின் சிற்றறிவுக்கு எட்டவில்லை! அவள் திரும்பிச் சென்றாள். *:

‘ஆண்களும், பெண்களும் சிறியவர்களும் பெரியவர்களுமாகத் தெரிந்தும், தெரியாமலும் என்ன பா.தே.24