பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


என்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் இந்த அரண்மனையில். காணாமற் போகிறார்கள்; வருகிறார்கள். என்னைப்போல் பொறுப்பும், பதவியும் உள்ளவனுக்குத் தான் மாபெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்கள் இருப்பதாக நான் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். கூர்ந்து நோக்கினால் வேறு சிலரும் இந்தப் பெருமைக்குப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா தெரிய வருகிறது!” வேடிக்கையாக இவ்வாறு எண்ணி நகைத்துக் கொண்டார் அவர். -

அப்போது சீவல்லப மாறன் திரும்ப வந்து, ‘மகாமண்டலேசுவரரின் திருவுள்ளப்படி திறமையான வீரர்களைத் தயார் செய்துவிட்டேன். அவர்கள் எல்லோரும் காவற்படை மாளிகையில் தங்கள் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இனி மேலே செய்யவேண்டியதென்ன?” என்றான். அவர் புன்னகை பூத்தார். -

மேலே செய்யவேண்டியதா! . . . இதோ என் அருகில்வா ... சொல்கிறேன்.”

சீவல்லபன் மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான்.

“உன் வலது உள்ளங்கையை நீட்டு!” அவன் நீட்டினான். குபிரென்று ஒரு நீளமான கருவேல முள்ளை எடுத்து அவனது சிவந்த உள்ளங்கையில் பதியும்படி குத்தினார் அவர். அவன் வலி பொறுக்கமுடியாமல் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அவருடைய செயலின் பொருள் புரியாமல் முகத்தை சுளித்துக் கொண்டான். .

“வேறொரு கருவியின் துணையின்றி இதை எப்படி எடுப்பாய்?” ஒன்றுமறியாத பச்சைக் குழந்தையை வினாவுவது போல் வினவினார். .

‘赛溪 ##

球令他哆姆命 அவன் பதில் கூறவில்லை! “இதோ இப்படி எடுக்கவேண்டும்” என்று மற்றொரு கூரிய முள்ளால் அதைக்கிளறி வெளியே எடுத்துவிட்டுச் சிரித்தார் அவர்.