பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

371


குன்றிமணி பழுத்ததுபோல் ஒரு துளி குருதி உருண்டு எழுந்தது அவன் கையில்.

மகாமண்டலேசுவரரின் அதிசயிக்கத்தக்க இந்தச் செயல் மெய்க்காவலர் படைத் தலைவனான சீவல்லபமாறனைத் திகைக்க வைத்தது. குழம்பிய உள்ளத்துடன் அவன் அவரைப் பணிவோடு நிமிர்ந்து பார்த்தான். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறியும் ஆவல் அவன் முகத்தில் நிறைந்திருந்தது.

“சீவல்லபமாறா? நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் இது போன்றதொரு வேலையைத்தான் செய்யவேண்டும். இது உனக்கு விளங்கியிருக்காது. விளக்கமாகச் சொல்கிறேன்; கேள்!” என்று ஆரம்பித்தார் அவர்.


12. கொடும்பாளூர் உடன்படிக்கை

கோனாட்டின் பெரு நகரமாகிய கொடும்பாளூர் அன்று வைகறையிலிருந்தே புதுமணப் பெண்போல் அழகு பொலிந்து விளங்கியது. அரண்மனைச் சுற்றுப்புறங்களும் வீதிகளும் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோட்டைக்கு வரும் அகன்ற வீதியில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றார்கள். உயர்ந்தோங்கி நின்ற பெரிய மலையைப் போன்ற கோட்டையின் பிரதான வாசலில் பூரண கும்பங்களோடும், பொற்பாலிகைகளுடனும், அரண்மனையைச் சேர்ந்த உடன் கூட்டத்துப் பெருமக்கள் சூழக் கொடும்பாளூர் மன்னன் நின்று கொண்டிருந்தான். யாரோ மதிப்புக்குரிய பெரியவர்களை மரியாதையாக வரவேற்பதாக எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல் தென்பட்டது. கோட்டைச் சுவரின் மேல் பக்கத்துக்கு ஐந்து பேராக நுழைவாயிலின் இருபுறம் நின்றுகொண்டு திருச்சின்னம் எனப்படும் நீண்ட வளைந்த இசைக் கருவியையும் முரசங்களையும் முழக்கிக் கொண்டிருந்தனர்.