பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

407


கொண்டாலும் உள்ளுக்குள்ளே அடக்கமுடியாத வெகுளி உண்டாயிற்று சீவல்லப மாறனுக்கு. அவன் மனம் உணர்ச்சிவசப்பட்டுக் கொதித்தது.

சே! சே! பொம்மை செய்வதற்காகக் களிமண்ணைப் பிசைந்து வைத்த குயவன் தன் நிலை சோர்ந்து அதே களி மண்ணில் தலைக்குப்புற வழுக்கி விழுவதுபோல் அறிவின் ஆற்றலால் எட்டுத் திக்கும் விட்டெறிந்து ஆள்வதாக எண்ணிக்கொண்டு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டு விடுகிறார்கள் சிலர். அரிய பெரிய அறிவாளியின் மனமும் கைகளும், சில சமயங்களில் எளிய சிறிய காரியங்களை நினைத்தும் செயல்பட்டும் தடுமாறி விடுகின்றன. அறிவில்லாதவனிடத்தில் இருக்க முடியாத அவ்வளவு பலவீனங்களும் அறிவுள்ளவனிடத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. தேனைக் குடிப்பதற்குப் போன ஈ தேனுக்குள்ளேயே விழுந்து முழுகி விடுவதுபோல் தண்ணீரில் விழுந்தவனைக் காப்பாற்றப் போனவனும் தண்ணிரில் விழ நேர்வதுபோல் காமம், குரோதம், பொறாமை, சுயநலம் இவையெல்லாம் கூடாதென்று சொல்லிக்கொண்டே இவைகளைத் தவிர வேறு பண்பையே கடைப்பிடிக்காத அறிவாளிகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் உலகில்? இந்த உலகத்தில் சாதாரண மனிதன் கவலையில்லாமல் வயிற்றுக்குச் சோறும், உடலுக்குத் துணியும் பெற்று ஊருக்குக் கெடுதல் செய்யாத சாதாரண அறிவுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் முதல் காரியமாக அறத்தையும் கருணையையும் மறந்து, மனம் மரத்துப்போன அறிவாளிகள் அத்தனை பேரையும் கழுவில் ஏற்றிக் கொன்றுவிட வேண்டும். உலகத்துக்கு அத்தனை கெடுதல்களையும் நினைவுபடுத்திச் சொல்லிக் கொடுப்பவர்கள் இவர்கள்.’

உள்ளங்கையில் குமிழிட்டு உருண்டு நின்ற ஒரு துளி இரத்தத்தைப் பார்த்துக்கொண்டே இவ்வளவு ஆவேசமான நினைவுகளையும் நினைத்துப் பார்த்துவிட்டான் சீவல்லபன். கையைப் போலவே அவன் முகமும் கோபத்தால் சிவப்பேறிவிட்டது. பேசத் துடிக்கும் வாயோடும் பேசுவதற்குப் பயந்த மனத்தோடும் மகாமண்டலேசுவரருக்கு முன்பு