பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றுகொண்டிருந்தான் அவன். அம்புகள் பாய்வதுபோல் ஊடுருவிப் பார்க்கும் அவருடைய இணைவிழிகளின் பார்வை அவனைக் கட்டுப்படுத்தி நிறுத்தியிருந்தது.

அமைதியாக அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்ற மகாமண்டலேசுவரர் மெல்ல நகை புரிந்தார். “சீவல்லபா! நீ நினைத்தது சரிதான், வரம்புக்குட்படாத அறிவின் கனம் உள்ளவர்களால் உலகத்தில் மற்றவர்களுக்கு எப்போதுமே வேதனைதான். உங்களைப் போல் உடல் வன்மையையும், உடல் உழைப்பையும் நம்பி வாழும் வீரர்கள் வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். என்னைப் போல் மனத்திண்மையையும், மன உழைப்பையும் நம்பி வாழ்பவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நின்று நிதானித்துச் சிந்தனையோடு தேங்கிப் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அறிவுக்கும், ஆண்மைக்கும் அவையிரண்டும் தோன்றிய நாளிலிருந்து நடந்து வரும் போராட்டம்தான் இது.”

அவருடைய சொற்களைக் கேட்டதும் சீவல்லபமாறன் திடுக்கிட்டான். ஏ! அப்பா! இவருடைய கண்களுக்கு முன்னால் நிற்கிறவன் மனத்தில்கூட ஒன்றும் நினைக்க முடியாது. போலிருக்கிறதே என் எண்ணங்களை எனது முகத்திலிருந்தே எப்படித் தெரிந்துகொண்டார் இவர்? என்று மலைத்தான். அவன்.

சிரித்துக்கொண்டே மெதுவாக நடந்து அவன் அருகே வந்து சுதந்திரமான உரிமையோடு அவனை முதுகில் தட்டிக்கொடுத்தார் அவர். -

“மெய்க் காவற்படைத் தலைவனே! நீ கவலைப் படாதே. என்னுடைய அறிவின் கனம் உனக்கு எந்தவிதமான கெடுதலையும் எப்போதும் உண்டு பண்ணாது. அதை எண்ணி நீ அஞ்சவேண்டியதே இல்லை. ஆயிரம் வேல்களாலும், வாள்களாலும் நாம் சாதிக்க முடியாத காரியத்தை ஒரு சொல்லால் ஓர் எழுத்தால் அறிவாளி சாதித்துவிடுகிறானே என்ற பொறாமை படை வீரனுக்கு ஏற்படுமானால் அதன்பின்