பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

417


மாற்றிக்கொண்டாள் புவனமோகினி. பல்லக்கு விரைந்து கொண்டிருந்தது.

பெருமூச்சோடு மெல்ல விம்மி அழுவதுபோன்ற ஒலியைக்கேட்டுத் திகைத்துத் திரும்பினாள் வண்ணமகள். அவள் கண்களுக்கு எதிரே சிவிகையில் வீற்றிருந்த மகாராணி ஒசைப்படாமல் மெல்ல அழுதுகொண்டிருந்தார். அந்தத் தாமரைப் பூ முகத்தில் கண்ணிர்த் துளிகளைக் கண்டபோது புவனமோகினி திடுக்கிட்டாள். அவளுக்குத் துயரங்கலந்த ஒருவகைப் பயத்தினால் மெய்சிலிர்த்தது. மகாராணியிடம்

என்ன பேசுவது? - ஏன் அழுகிறீர்கள்? என்று எப்படிக் கூசாமல் கேட்டது? ஒன்றும் புரியாமல் திகைத்துக் கலங்கும் மனநிலையோடு மகாராணியையே பார்த்துக்

கொண்டிருந்தாள் அந்த எளிய வண்ணமகள்.

“புவனமோகினி! என் அழுகையின் காரணம் புரியாமல் தானே நீ இப்படி என்னைப் பார்க்கிறாய்? கேட்டால் நான் ‘வருந்துவேனோ என்று தயங்குகிறாய் இல்லையா?”

சாம்பலை ஊதிக் கனியவைத்த மங்கலான நெருப்பின் ஒளிபோல் அழுகையின் நடுவே ஒரு புன்னகையோடு கேட்டார் மகாராணி.

“தாயே! தங்கள் முகத்தையும், கண் ணிரையும் பார்க்கும்போது எனக்குப் பெரிதும் வேதனையாயிருந்தது. அதே சமயத்தில் தங்களைக் கேட்பதற்கும் பயமாக இருக்கிறது.” “பயம் என்ன வந்த்து உனக்குத் தோன்றிய எண்ணத்தை நீ கேட்கவேண்டியதுதானே?” -

“திருவட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மைத் துன்பத்தை எண்ணி உங்கள் மனம் கலங்குகிறதென்று நான் அனுமானிக்கிறேன். நீங்கள்தான் அந்தப் பெண்ணின் துன்பத்தைப் போக்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களே! இனியும் ஏன் கலங்கவேண்டும்?” -

“கலக்கமல்ல, பெண்ணே இது! உலகத்தின் கசப்பு நிறைந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு அழுகை வருகிறது. எனக்கு அழுகை வரும் பா.தே.27