பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


என்னிடம் சொல்லிக் கொள்வதற்குக்கூட நேரமில்லை போலிருக்கிறது. அவளும் போய்விட்டாள். மனம் விட்டுப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள் அரண்மனையில்? காந்தளூர் மணியம்பலத்துக்குப் போய் நிம்மதியாக இரண்டு நாட்கள் தங்கிவிட்டுக் கொஞ்சம் மெதுவாகத்தான் திரும்பிப் போகலாமே, இப்போது என்ன அவசரம்?”

“அவசரம் இல்லை! ஆனால் நாம் கூடியவரையில் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டிருக்கிறோமே என்றுதான் கவலைப்படுகிறேன்.”

“ஒரு கவலையும் உனக்கு வேண்டாம். பேசாமல் என்னோடு 6)ifr!”

கண்களைத் துடைத்துக்கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு மகாராணி இவ்வாறு உறுதிமொழி கூறியதும் புவன மோகினி அமைதியடைந்தாள்.

மகாராணியையும், வண்ணமகளையும் சுமந்துகொண்டு அந்தப் பல்லக்கு அப்படியே காந்தளுரை அடைவதற்குள் நேயர்களுக்கு ஒருவாறு காந்தளூர் மணியம்பலத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்தி வைத்துவிடுகிறேன். -

பல்லாயிரங் காலத்துப் பேரெல்லைவரை பரவிக் கிடக்கும் தமிழக வரலாற்றுப் பெருக்கில் தமிழ் மூவேந்தர்களிற் சிறப்பெய்திய எவரும் காந்தளூருடன் தொடர்புற்றிருப்பர். எந்த மகா மன்னனுடைய மெய்க் கீர்த்தியும் காந்தளூர்ச் சாலையில் கலமறுத்தருளிய பெருமையைப் பறைசாற்றத் தவறியதில்லை. எத்தனை முறைகள் தோல்வியடைந்தாலும் பாண்டியனை எதிர்த்துக் காந்தளூரை வென்றிடும் ஆசையை எவரும் விடத் தயாராயில்லை. இவ்வாறு மன்னாதி மன்னர்களின் ஆசைகளை வளர்க்கும் அழகுக் கனவாகத் தென்பாண்டி நாட்டில் இலங்கிவந்தது காந்தளூர். - - செருவல ரானதன்ாற் சிந்தியார் போலும் மருவலராய் வாள்மாறன் சிறக்-கருவிளை கண்தோற்ற வண்டரவம் கார்தோற்றும் காந்தளூர் மண்தோற்ற வேந்தர் மனம்.