பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“மாணவர்களே! சமயவெறி ஒப்புக்கொண்ட வாழ்க்கை இதுதான். இதுவே தவம்” என்று மூதறிஞர் கூறி முடித்தார்.

“எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும்.” மகாராணி தமக்குள் மெல்லக் கூறிக்கொண்டார் அந்த வாக்கியத்தை விளக்கைக் கண்டவுடன் மாயும் இருள்போல் நெடுநேரமாக மனத்தை வதைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்றை அந்த முதுபெரும் புலவர் கூறிய திருக்குறள் கருத்து நீக்கிவிட்டது போலிருந்தது. “புவன மோகினி வா... நாம் அரண்மனைக்கே திரும்பிப் போய்விடலாம்.” இவ்வாறு கூறிவிட்டு இருளில் மறைந்து நின்று கொண்டிருந்த மகாராணி புறப்பட்டபோது புவன மோகினிக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. மகாராணியின் மனம் ஒரு நிலையில் நிற்காமல் ஏதோ காரணத்தால் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போலுமென்று அவளுக்குத் தோன்றியது. -

“இரண்டு நாட்கள் இங்கே நிம்மதியாகத் தங்கி விட்டுப் போகவேண்டுமென்று கூறினீர்களே! இப்போது உடனே புறப்படவேண்டுமென்கிறீர்களே சுசீந்திரத்திலிருந்தே அரண்மனைக்குத் திரும்பியிருந்தால் இதற்குள் போய்ச் சேர்ந்திருக்கலாமே?” என்று மெல்லிய குரலில் மகாராணியைக் கேட்டாள் வண்ணமகள்.

“பெண்ணே ! அப்போது அப்படித் தோன்றியது, சொன்னேன். இப்போது இப்படித் தோன்றுகிறது, சொல்கிறேன். இரண்டு நாட்கள் இந்த மணியம்பலத்தில் தங்கி என்னென்ன தெரிந்துகொண்டு நிம்மதி அடைய வேண்டுமென்று எண்ணி வந்தேனோ அந்த நிம்மதி இரண்டு கணங்களில் இந்தப் புலவரின் சொற்களில் கிடைத்துவிட்டது.”

‘போகு முன் பவழக்கனி வாயரைப் பார்க்க வேண்டுமல்லவா?” -

“யாரையும் பார்க்கவேண்டாம்! யாருக்கும் தெரியாமல் நாம் திரும்பி விடுவோம்!”