பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“இல்லை, அம்மா! நீ சொல்வது தவறு. என்னையறியாமலே இன்று காலையிலிருந்து இந்தக் கணம் வரை உங்களையெல்லாம் துன்புறுத்திக் கொண்டிருந்து விட்டேன் நான். நீங்கள் எல்லாம் பசியும் களைப்பும் அடைந்திருக்கிறீர்கள் என்பதை நான் உணராமலும், நினைக்காமலும் இருந்தது எவ்வளவு பெரிய தவறு? பிறரைத்துன்புறுத்துகிறதை உணராமல் நாகரிகமாகவும், கெளரவமாகவும் இருந்துவிடுகிறோம் சில சமயங்களில்.”

“தேவி! தங்கள் கவலைகள் ஆயிரமாயிரம். அவற்றுக் கிடையிலும் கருணையும், இரக்கமும் எங்கள் மேலிருக்கின்றன என்று அறிவதே எங்களுக்கெல்லாம் வயிறு நிறைந்த் மாதிரி. முன்சிறைக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டாம். தவிர, நமது சிவிகை போய்ச் சேருகிற நேரத்துக்கு அறக்கோட்டத்தில் உணவு வைத்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்!”

“எல்லாம் வேண்டிய உணவு இருக்கும். என் சொற்படி கேளுங்கள், தடுத்துப் பேசாமல் முன்சிறைக்கே செல்லுங்கள்” என்று உறுதியான குரலில் மகாராணி உத்தரவிட்டபின் புவனமோகினியால் தடுக்க முடியவில்லை. சிவிகை வழிமாறி விரைந்தது. வெள்ளம்போல் பெருகும் இந்தக் கருணை உள்ளத்த்ை நினைத்தபோது சிவிகை சுமப்பவர்களுக்குக்கூட மனம் உருகியது. அதிகாரம் செய்பவர்களுக்கு அதுதாபப்படும் பண்பு குறைவாயிருக்கும்; ஆனால் மகாராணி வானவன்மாதேவிக்கு அநுதாபப்படும் பண்பு அதிகமாக இருந்தது. அதிகாரம் செய்யும் பண்பு மிகக் குறைவு என்பது அவரோடு சிறிது நேரம் பழகினாலும் தெளிவாகத் தெரிந்துவிடும்.


20. எதையும் இழக்கும் இயல்பு

இரவு ஒன்பது, பத்து நாழிகை இருக்கும். முன்சிறை அறக்கோட்டத்தின் முன்வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டு