பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

439


(பல்லக்குத் தூக்கிப் போவோர்) அண்டராதித்தனும் கோதையும் &#3óõõrl_@ūffT. -

“தேவி! வரவேண்டும், வரவேண்டும். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாகத் தாங்கள் வந்தருளியது அறக்கோட்டத்துக்கே பெருமை” என்று பரபரப்படைந்து கூறினான் அண்டராதித்தான். கோதை ஒன்றும் பேசத் தோன்றாமல் பயபக்தியோடு மகாராணியைக் கைகூப்பி வணங்கினாள். அவசரம் அவசரமாக உள்ளே ஒடிப்போய்க் கைவிளக்கைப் பொருத்தி ஏற்றிக்கொண்டு வந்தான் அண்டராதித்தன். அவன் விளக்கை முன்னால் பிடித்துக்கொண்டு மகாராணியையும் வண்ணமகளையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

கோதை ஒடிப் போய் மகாராணி அமர்வதற்கேற்ற ஆசனம் ஒன்றைத் தேடி எடுத்துக்கொண்டு வந்துபோட்டாள். மகாராணி அமர்ந்து கொண்டார். அண்டராதித்தன் மகாராணி என்ன கூறப்போகிறார் என்பதைக் கேட்பதற்குச் சித்தமாகக் கைகட்டி வாய் பொத்திப் பவ்யமாக அருகில் நின்றான். புவனமோகினி தரையில் மகாராணிக்கு அருகே உட்கார்ந்து கொண்டாள். மருண்ட பார்வையோடு கோதை அண்டராதித்தனின் முதுகுக்குப் பின்னால் அடக்க ஒடுக்கமாகத் தோற்றமளித்தாள். அவளுடைய கலகலப்பான சுபாவத்துக்கும், குறுகுறுப்பான பேச்சுக்கும் முற்றிலும் மாறாக இருந்தது, அவள் செயற்கையாக வருவித்துக் கொண்ட அந்த அடக்கம்.

“என்ன ஐயா, அறக்கோட்டத்து மணியக்காரரே! பசியோடு உங்கள் அறக்கோட்டத்தைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறோம், எங்கள் வயிற்றை நிரப்புவதற்கு ஏதாவது வைத்திருக்கிறீரா?”

மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கிறாரென்று நினைத்துக் கொண்டான் அண்டராதித்தன்.

“தேவி! தாங்கள் உத்தரவிட்டால் இப்போதே அறுசுவை உண்டி தயாரித்து அளிக்கிறோம்."