பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

453


கிழித்து வெளிப்பாயும் மின்னல் ஒளிக்கோடுபோல் அவன் தன் உறையிலிருந்து வாளை விெளியே உருவினான்.

பின்புறமிருந்து அரசூருடையானது கேலிச் சிரிப்பின் ஒலி கிளர்ந்து எழுந்தது. “இனிமேல் சந்தேகத்துக்கு இடமே இல்லை. கொடும்பாளுராருடைய திட்டம் முழுக்கத் தோற்றுவிட்டது. இப்போது அவருக்கு உண்டாகும் அதிகப்படியான கோபமே அவருடைய அதிகப்படியான தோல்விக்கு அடையாளம்தான்!” அரசூருடையானின் இந்தச் சொற்கள் கொடும்பாளூர் மன்னனின் கொதிப்பை மிகைப்படுத்தின. அவன் வலக்கையில் துடித்த வாளின் துணியிலிருந்து சிதறி மேலும் ஒளிக்கொழுந்துகள் பயந்து நின்றுகொண்டிருந்த அந்த மூன்று பேருடைய கண்களையும் கூசச் செய்தன. அந்த ஒளியும் அதை உண்டாக்கும் வாளின் நுனியும் இன்னும் சில கணங்களில் தங்கள் நெஞ்சுக் குழியை நறுக்கிக் குருதிப் பெருக்கில் குளித்தெழுந்துவிடப் போகிறதே என்று அவர்களுடைய தேகத்தின் ஒவ்வோர் அணுவும் புல்லரித்து நடுங்கிக்கொண்டிருந்தது. தங்கள் மூவரின் உயிருக்கும் மொத்தமாக உருப்பெற்ற காலன் அந்த வாள் வடிவில் மின்னிக் கொண்டிருப்பதை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். இன்னும் ஒரு நொடியில் அற்றுப்போக இருக்கும் உயிருக்கும் தங்களுக்கும் நடுவேயிருந்த பந்தத்தைக்கூட ஏறக்குறைய அவர்கள் மறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்தச்சமயத்தில் கொடும்பாளுரானின் கோபத்தைச் சோழ மன்னன் தணிக்க முன் வந்தான்.

“ஐயா! கொடும்பாளுர் மன்னரே! கோபத்தை இடம் தவறி, இலக்குத் தவறி, தகுதி தவறி, அநாவசியமாக இவர்களிடம் செலவழித்து என்ன பயன்? எவர்களுடைய தலைகளை வாங்க வேண்டுமோ, அவர்களுடைய தலைகள் கிடைக்காவிட்டால் அதைச் செய்வதற்குச் சென்ற இவர்களுடைய தலைகளை வாங்கி என்ன பெருமைப் பட்டுவிட முடியும்? புலி வேட்டையாடப் போனவன் குழிமுயலை அடித்துக்கொண்டு திரும்புகிறமாதிரி, பெரியது