பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

457


ஏதாவது தொரு கலையின் சுவை அநுபவத்தில் மிதக்க வேண்டும் போலிருந்தது அவர்களுக்கு.

“கொடும்பாளுர் மன்னரே ! வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் நாங்கள் நால்வரும் இங்கேயிருக்கிறவரை உம்முடைய விருந்தாளிகள். உற்சாகமும் மன எழுச்சியும் வெற்றியில் நம்பிக்கையும் ஊட்டத்தக்க ஒரு பொழுது போக்கு இப்போது எங்களுக்குத் தேவை. அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சோழன் வேண்டிக் கொண்டான். “அப்படியானால் தேவராட்டியின் கொற்றவைக் கூத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எல்லோரும் கண்டுகளிக்க வேண்டிய கலை அது. இந்தச் சோர்ந்த சூழ்நிலையில் அதைக் கண்டு புதிய எழுச்சியும் பெற முடியும்’ என்றான் கொடும்பாளுரான்.

“அது யார் தேவராட்டி?” “அவள் இந்தக் கொடும்பாளுர் அரண்மனையில் தனிச் சிறப்பு வாய்ந்த ஒர் ஆடல் மகள். தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும்போதே அவளுக்குத் தெய்வ ஆவேசத்தால் அருள் வந்துவிடும். அந்தச் சமயத்தில் அவள் வாயிலிருந்து எதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். தேவி சந்நதத்தில் வாய் சோர்ந்து நமக்கு வேண்டிய உண்மைகள் அவளிடமிருந்து வரும். கையில் திரிசூலம் ஏந்திச் சுழற்றிக் கொண்டே அவள் கொற்றவைக் கூத்தாடும்போது, அவளே காளியாக மாறிக் காட்சியளிப்பாள் நம் கண்களுக்கு.”

“இது என்ன, நம்ப முடியாத வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!”

“வேடிக்கையில்லை. அந்த ஆடல் மகள் இன்னும் தூய்மையான கன்னியாகவே வாழ்கிறாள். தேவதைகளுக்கு உள்ள மதிப்பு அவளுக்கு இந்த அரண்மனையில் உண்டு” என்று கொடும்பாளுர் மன்னன் பயபக்தியோடு மறுமொழி கூறினான். “அதற்கே ஏற்பாடு செய்யுங்கள், அந்தக் கொற்றவைக் கூத்தைக் காணும் பாக்கியத்தை நாங்களும் பெறுகிறோம். சோழ மன்னனின் விருப்பப்படி கொடும்பாளுர் மன்னன் கூத்தரங்கத்தை வகுத்து, அவர்களையெல்லாம் அழைத்துக்