பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


நீ கூத்தனேதான்!” சேந்தன் தற்செயலாக அவன் பேரைக் கேட்டதும், தன்மனத்தில் பட்டதைத்தான் மேற்கண்டவாறு கூறினான். ஆனால் அதைச் செவியுற்றதும் அந்த வாலிபனது முகத்தில் அவ்வளவு பீதியும் பரபரப்பும் ஏன் உண்டாயினவோ? சற்றுக் கூர்ந்து கவனித்தால் அவன் உடல் மெல்ல நடுங்கிப் புல்லரித்து ஒய்வது கூடத் தெரியும். சேந்தன் குழல்வாய்மொழியைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டான்"அம்மணி! நீங்கள் சொல்லுங்கள். இவனை என்ன செய்யலாம்? போனால் போகிறானென்று இப்படியே நம்கூட இந்தக் கப்பலில் பயணம் செய்வதற்கு அநுமதித்து விடலாமா? அல்லது கடலில் பிடித்துத் தள்ளிவிடலாமா?” - - -

சேந்தனுடைய கேள்விக்குக் குழல்வாய்மொழி பதில் சொல்லுமுன் அந்த வாலிபனே முந்திக்கொண்டு, “கடலில் தள்ளிவிடுங்கள். இந்தக் கடலில் அல்ல. உங்களுடைய கருணைக் கடலில் என்னையும் தள்ளிக்கொண்டு காப்பாற்றுங்கள்” என்றான். அதைக் கேட்டு மகாமண்டலேசுவரரின் அருமை மகள் உள்ளம் பூரித்தாள். சேந்தனோ முகத்தைச் சுளித்துக் கொண்டு சொன்னான்:-"பயல் விநயமாகப் பேசுவதில் உலகத்தை விலைபேசி விற்றுச் சுருட்டிக்கொண்டு போய் விடுவான் போலிருக்கிறது. அதைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், அம்மணி!” - -

“ஆனாலும் பரவாயில்லை! கப்பலில் எத்தனையோ ஊழியர்கள் இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் உதவியாக ஒர் ஆள் வேண்டுமல்லவா? இவனும் இருந்து விட்டுப் போகட்டும். இவன்தான் பழைய முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு நம் வழிக்குப் பணிந்து வந்துவிட்டானே! இனிமேல் இவனால் நமக்குக் கெடுதல் இருக்காது’ என்றாள் குழல்வாய்மொழி. அவளுடைய ஆதரவான சொற்களைக் கேட்ட பின்புதான் அந்த வாலிபனுடைய முகத்தில் மலர்ச்சி வந்தது. - ... . . .

“என்னமோ, உங்கள் பாடு; இவன் பாடு. இவனைக் கட்டி மேய்ப்பதற்கு என்னால் முடியாது. நான் மேல்தளத்துக்குப்