பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

487


போகிறேன்” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விட்டான் நாராயணன் சேந்தன்.

“சகோதரி! இந்தக் குட்டை மனிதர் யார்? கொதிக்கிற எண்ணெயில் கடுகு வெடிக்கிறமாதிரி ஏன் இப்படித் திடீர் திடீர் என்று இவருக்குக் கோபம் வந்துவிடுகிறது? இவர் உங்களுக்கு உறவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் வாலிபன்.

“கூத்தா! அது அவர் சுபாவம்; அதை நாம் மாற்ற முடியாது. எனக்குக் கள்ைப்பாக இருக்கிறது. நான் படுத்து உறங்கப் போகிறேன். நீயும் மேல்தளத்துக்குப் போ. நான் கூப்பிடுகிறபோது வந்தால் போதும்” என்றாள் குழல்வாய்மொழி. கூத்தன் என்ற அந்த வாலிபன் கப்பலின் மேல்தளத்துக்கு ஏறிப்போனான். அவன் சேந்தனோடு ஒட்டிக் கொண்டு, நெருங்கிப் பழக முயன்றான். ஆனால் சேந்தன் நெருங்க விடவில்லை. யாரோ சொல்லி வைத்து ஏற்பாடு செய்திருந்ததுபோல் கப்பல் ஊழியர்களும் அந்த வாலிபனோடு ஒட்டுதல் இன்றியே பழகினார்கள். அவனுடன் பேச நேரும்போதெல்லாம். பொட்டைப் பயல் பொட்டைப் பயல்’ என்று வாய்க்கு வாய் திட்டினான் சேந்தன்.


27. குழைக்காதன் - திரும்பி வந்தான்

கோட்டாற்றுப். படைத்தளத்தின் பிரும்மாண்டமான முரச மேடையில் நின்று கொண்டு கண்களின் எதிரே கடல் போல் பரந்து தோன்றும் படையணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவன், படைக்கோட்டத்தின் வாசலில் ஆபத்துதவிகள் தலைவனின் உருவத்தைப் பார்த்ததுமே பரபரப்படைந்தான். அவனைச் சந்தித்து அவன் கொண்டுவரும் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலினாலும், பரபரப்பினாலும் ஒரு கணம் தன் நிலை, தான் நின்றுகொண்டிருந்த சூழல் எல்லாவற்றையுமே மறந்துவிட்டான்