பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


கேட்க முடியும்! அதற்காகப் பாராட்டுகிறேன். தங்களுடைய கால்களின் அளவுக்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, மற்றவர்களுடைய பாதக் குறடுகளைத் திருடிக் கொண்டுபோக ஆசைப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதே மாதிரி, மற்றவர்களுடைய பதவிகளைத் தங்கள் தகுதிக்குப் பொருந்தாவிட்டாலும், அடையத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் நான் என்ன செய்வது? என்னுடைய காலுக்கு அளவான பாதக் குறடுகளை நான்தானே அணிந்து கொள்ள முடியும்? நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பதற்காக என் பாதக்குறடுகளை உங்களிடம் நான் எப்படிக் கொடுக்கலாம்?”

மகாமண்டலேசுவரர், கழற்கால் மாறனாரைச் செருப்புத் திருடுகிறவனோடு ஒப்பிட்டு மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசியபோது வானவன்மாதேவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டுச் சிரித்துப் பழக்கமில்லாத அவர் அப்போது அடக்க முடியாமல் சிரித்துவிட்டார். 3.

“தானாகக் கனியாவிட்டால் தடி கொண்டு அடித்துக் கணிய வைப்போம். எங்களுடைய ஒப்புரவு மொழி மாறா ஒலை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்!” கழற்கால் மாறனார் ஆத்திரத்தோடு இரைந்தார். “உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், சரியான எதிரிகள் பக்கத்தில் இல்லாத காரணத்தால் சிறிது காலமாக என் சிந்தனைக் கூர்மை மழுங்கிப் போயிருக்கிறது. நீங்களெல்லாம் கிளம்பினால் அதைக் கூர்மையாக்கிக் கொள்ள எனக்கு வசதியாக இருக்கும்.”

“அறிவின் திமிர் உங்களை இப்படி என்னை அலட்சியமாக எண்ணிகொண்டு பேசச் செய்கிறது!”

“ஆசையின் திமிர் உங்களை இப்படி ஒப்பரவு மொழி மாறா ஒலையோடு ஓடிவரச் செய்கிறது!’ கன்னத்தில் அறைவதுபோல் உடனே பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.

“உங்கள் ஆட்சியின்மேல் எனக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்காக மகாமன்னர் பராந்தக பாண்டியர் காலத்தில்