பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

521


நிலவறையிலிருந்து இரவோடு இரவாக யாரோ ஆயுதங்களைக் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள்’ என்று அம்பலவன் வேளான் வந்து புதிதாக ஒரு செய்தியைச் சொன்னபோது அவர் பலவாறு சந்தேகப்பட்டார்.


32. பழைய நினைவுகள்

“சக்கசேனாபதி! மனத்தையும் கண்களையும் திறந்து வைத்துக்கொண்டு எழிலுணர்ச்சியோடு பார்க்கிறவனுக்கு உலகம் எவ்வளவு அழகாயிருக்கிறது பார்த்தீர்களா?”

கையில் வலம்புரிச்சங்கும், உடலில் கடற் காய்ச்சலுமாகக் கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த இராசசிம்மன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சக்கசேனாபதியை நோக்கி இப்படிக் கோட்டான்;

“பார்த்தேன் இளவரசே! நன்றாகப் பார்த்தேன். இந்த அழகின் துண்டுதலால் நீங்கள் சற்று முன் கவிதையே பாடி விட்டீர்களே! உங்கள் கவிதையின் இனிய ஒலியிலிருந்து என் செவிகள் இன்னும் விடுபடவில்லை. அதைக் கேட்ட வியப்பிலேயே இன்னும் ஆழ்ந்துபோய் நின்றுகொண்டிருக்கிறேன் நான்.”

“என்னவோ மனத்தில் தோன்றியது; நாவில் வார்த்தைகள் கூடித் திரண்டு வந்து எங்களை முறைப்படுத்தி வெளியிடு என்று துடித்தன. பாடினேன்.”

“இப்படி ஏதாவது தத்துவம் பேசிக் குமார பாண்டியர் என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றிவிடமுடியாது. உங்களைக் கவிஞராக மாற்றிய கவினுறும் அழகின் வனப்பு நீங்கள் கப்பலில் நின்று பார்க்கும் இந்தக் கடலிலும் வானத்திலும் மட்டும் இல்லை.”

“வேறு எங்கு இருக்கிறதாம்?”

“எனக்குத் தெரியும், நேற்று உறக்கத்தில் எத்தனை முறை அந்தப் பெயரைப் பிதற்றினர்கள்! உங்களைக் கவியாக மாற்றிப்