பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


காரணத்தால்தானோ என்னவோ தமிழ் மொழியில் செல்வத்துக்கு ‘வெறுக்கை’ என்று ஒரு பெயர் ஏற்பட்டுவிட்டது. அநுபவிக்கிறவன் ஞானமுள்ளவனாக இருந்தால் செல்வத்தின் சுகங்களை வெறுத்துவிட்டு அதைவிடப் பெரியதைத் தேடிக்கொண்டு ஒடும் நிலை ஒருநாள் வந்துதான் தீரும்.

இராசசிம்மன் நினைத்துப் பார்த்தான். பேரரசராகிய சடையவர்ம பராந்தக பாண்டியருக்கும், பேரரசியாகிய வானவன்மாதேவிக்கும் புதல்வனாகப் பிறந்து மதுரைமா நகரத்து அரண்மனையில் தவழ்ந்த நாட்களை நினைத்தான். தந்தையின் தோள் வலிமையும், வாள் வலிமையும், ஆள் வலிண்மயும் அன்றையப் பாண்டிய நாட்டைப் பெரும் பரப்புள்ளதாகச் செய்திருந்தன. அப்போது மதுரை கோநகரமாக இருந்தது, அவன் சிறுவனாக இருந்தபோது, sojsséF குலவீர வழக்கத்தின்படி சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு என்னும் ஐந்து ஆயுதங்களையும்போல் சிறிதாகப் பொன்னிற் செய்து நாணில் தொடுத்து அவனுடைய கழுத்தில் தம் கையாலேயே கட்டினார் அவனுடைய தந்தை. வீரத்துக்குச் சின்னமாகச் சிறுவர்களுக்கு அரச குலத்தில் கட்டப்படும் ‘ஐம்படைத்தாலி அது. ஒருநாள் தந்தை பராந்தகரும், தாய் வானவன்மாதேவியும் அருகில் இருக்கும்போது அவன் எதற்காகவோ முரண்டு பிடித்துக்கொண்டே கழுத்தில் கிடந்த ஐம்படைத்தாலியை அறுத்துச் சிதறி விட்டான். அப்போது பராந்தகர் தம் மனைவியை நோக்கி, “மாதேவி, இந்தப் பயல் எதிர்காலத்தில் நாட்டையும், ஆட்சியையும்கூட இப்படித்தான் அறுத்துச் சிதறிவிட்டுத் திரிந்து கொண்டிருக்கப்போகிறான். எனக்கென்னவோ இவன் என்னைப் போல் இவ்வளவு இராக ஆளமாட்டான் என்றுதான் தோன்றுகிறது!’ என்றார். மாதேவிக்கு அதைக் கேட்டதும் தாங்கமுடியாமல் கோபம் வந்துவிட்டது. -

“நீங்களாகவே வேண்டுமென்று இவனைக் குறைவாக மதிப்பிடுகிறீர்கள். உங்களைவிடப் பெரிய வீரனாக எட்டுத்