பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


தந்தையின் மரணத்துக்குப்பின் நடந்த நிகழ்ச்சிகள் அவன் நினைவைப் பற்றிக்கொண்டு வரிசையாகத் தொடர்ந்து உள்ளத்தில் ஓடின.

“தந்தை காலமாகும்போது கோனாட்டின் தென் பகுதியிலிருந்து குமரிவரை பரந்து விரிந்த பாண்டிய நாட்டை எனக்கு வைத்துவிட்டுப் போனார். நான் என்ன செய்தேன்? என் கண் காணக் கரவந்தபுரத்திலிருந்து குமரி வரை குறுகிவிட்டதே அந்த நாடு! தந்தை காலஞ்சென்ற சிறிது காலத்துக்குப்பின் நானும் வீராவேசமும், உரிமை வேட்கையும் கொண்டு சில போர்களில் வெற்றி பெறத்தான் செய்தேன். உவப்பிலிமங்கலத்தில் நடந்த போரில் இருவர் மூவராக சேர்ந்துகொண்டு வந்த வடதிசையரசர்களைக்கூட வென்றேன். அப்போது பாண்டி மண்டலப் பெரும்படை மிகப் பெரியதாகவும் வலுவுள்ளதாகவும் இருந்தது. தஞ்சாவூர்ச் சோழன் வைப்பூரில் நடந்த போரிலும், நாவற் பகுதியில் நடந்த போரிலும், இரண்டு முறை என் தலைமையில் பாண்டி மண்டலப் படைக்குத் தோற்றோடியிருக்கிறான். இப்பொழுது கொழுத்துப் போய்த் திரியும் இந்த கொடும்பாளுர்க்காரனும் ஒரு முறை என்னிடம் தோற்றிருக்கிறான். -

அன்று என் வெற்றிகளைப் புகழ்ந்து மெய்கீர்த்திகளையும், பாமாலைகளையும் புலவர்கள் பாடினார்கள். நீளநீளமான சிறப்புப் பெயர்களை எனக்குக் க்ொடுத்தார்கள். சடையன் மாறன், இராசசிகாமணி, சீகாந்தன், மந்தர கெளரவ மேரு, விகட பாலன் என்றெல்லாம் புகழ்ந்தார்கள். தந்தையின், காலத்திற் செய்தது போலவே, நானும் அன்னையையும் கலந்தாலோசித்துக் கொண்டு எண்ணற்ற தேவதானமும் (கோயில்களுக்கு மானியம்) பள்ளிச்சந்தமும் (சமணப் பள்ளிகளுக்கு மானியம்) பிரமதேயமும் (அந்தணர்களுக்கு மானியம்) அளித்தேன். மதுரை வட்டாரத்தில் இருக்கும் நற்செய்கை புத்துார் என்னும் சின்னமனூர் முழுவதையுமே ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்த ஓர் அந்தணருக்குப் பிரம்மதேயமாகக் கொடுத்தேன். அதனால் என் சிறப்புப் பெயரோடு மந்தர கெளரவ மங்கலம் என்றே அவ்வூர் பெயர்